பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 229. கோவை போன்ற இசைத்தமிழ் இலக்கண நூல்களும் தோன்றின. பிற்காலத்தில் குறிப்பாக நாயக்க மன்னர்கள் காலத் தில் தமிழிசை நாட்டில் செல்வாக்கிழந்து தெலுங்கிசை சிறப்பிடம் பெற்றது. கர்நாடக இசை என்றாலே தெலுங்குப் பாடல்கள்தாம் என்ற மயக்கம் தரும் அளவிற்குத் தெலுங்கிசையும் தெலுங்குக் கீர்த்தனைகளும் தமிழகத்தில் போற்றப்பட்டன. தெலுங்கிசையில் வட மொழி இசையின் தாக்குரவு மிகுதி. இதனால் தமிழிசை யிலும் வடமொழி இசையின் தாக்குரவு ஏற்படலாயிற்று. இவ்வாறு தமிழிசை வடமொழியின் வாய்ப்பாட்டு, ஏழிசைப் பெயர்களான குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று இருந்தவை மாறி சட்சம் முதல் நிடாதம் வரையுள்ள சமஸ்கிருதப் பெயர்களைப் பெற்று ச,. հ, وتتك LD و 35 . لا و நி என்று இன்று வழங்குகின்றன. அதுபோல தமிழ்ப்பண்கள் வடமொழிப் பெயர்களை ஏற்று, செவ்வழி என்பது யதுகுலகாம்போதி என்றும், சாதாரி என்பது காம வர்த்தினி என்றும், புறநீர்மை என்பது பூபாளம் என்றும், இந். தளம் என்பது மாயாமாளவகெளவை என்றும் அழைக்கப் படுகின்றன . . இவ்வாறு தமிழிசை மெல்ல மெல்லத் தெலுங்கிசையாக வடமொழி இசையாக மாற்றப்படுவதை. உணர்ந்த பாரதியார், 'வித்துவான்கள் பழைய கீர்த்தனை களைப் பாடம் பண்ணிப் புராதன வழிகளைத் தெரிந்து கொள்வது அவசியம். ஆனால் தமிழ்ச்சபைகளிலே எப்பொழுதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளிலே பழம்பாட்டுகளை மீட்டும் பாடுதல் நியாயமில்லை. அதனால் நமது ஜாதி, சங்கீத ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும் என்று எச்சரிக்கை செய்தார். இவ்வெச்சரிக்கை தமிழர்களிடையே தமிழிசையைப் போற்ற வேண்டும் என்ற வேட்கையை உருவாக்கியது. அதற்கான வழிகளைத் தேடத் தொடங்கினர். முதன்