பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் முதலில் தமிழிசைக்குப் புத்துயிர் அளிக்க வேண்டித் தொண்டாற்றிய பெருமை இராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களையே சாரும், அரசர் அவர் களால் 1943 ஆம் ஆண்டு தமிழிசை இயக்கம் தொடங்கப் பெற்றது. (அன்றுமுதல் இன்றுவரை தமிழ்ப்பண்களை ஆய்வு செய்து வருகின்றனர்). இக்காலக் கட்டத்தில்தான் பாவேந்தரும் தோன்றித் தமிழிசைக்குப் புத்துயிர் அளிக்க அரும்பாடுபட்டார். பிறமொழி இசைகளை வெறுத்தார். தமிழ்நாட்டில் தமிழிசை மட்டுமே செல்வாக்குப் பெற்ற இசையாக இருக்கவேண்டும் என்று கூறிப் பற்பல இசைப் பாடல்களை இயற்றினார். தெலுங்கிசையும் வடமொழி இசையும் தமிழ்நாட்டில் தமிழிசையை மங்கச் செய்யத் தொடங்கின. தமிழிசை யைக் கேட்பதே அரிதாகியது. பாவேந்தர் மனம் தமிழிசை யைக் கேட்கவேண்டும் என்று ஏங்குகின்றது. என்னருமைத் தமிழ்நாட்டை எழிற்றமிழால் நுகரேனோ செவியால் யாண்டும் கன்னல்நிகர் தமிழிசையே கேளேனோ. -பாரதிதாசன், தமிழியக்கம், ப. 10 இவ்வேக்கம் நிறைவேறத் தடையாகத் தெலுங்கிசை இருந்தமையை உணர்ந்த பாவேந்தர் தெலுங்கிசை தெலுங்கு நாட்டில் இருக்கட்டும். அவ்விசைக்கு இங்கென்ன வேலை? என்று கேட்கின்றார். தெலுங்கு காட்டில் தெலுங்கு வேண்டும் செந்தமிழ் நாட்டில் அதற்கென்ன வேலை? தெலுங்கு நாட்டில் செந்தமிழ்ப்பாட்டைச் சேர்ப்ப துண்டோ? இல்லவே இல்லை. -பாரதிதாசன், இளைஞர் இலக்கியம், ப. 11