பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 231 அதனால் தெலுங்கிசையையும் அத்துடன் பின்னிப் பிணைந் துள்ள வடமொழி இசையையும் தமிழ்நாட்டை விட்டு நீக்குதல் வேண்டும் என்கின்றார். தமிழிசையின் பெருமைதனை உணராத சிலர், தமிழ் மொழி அமைப்பு இசைக்கு உதவாது என்றும், இசைப் பாடல்கள் தமிழ்மொழியில் கிடையாது என்றும், இசைக்கு மொழி தேவை அற்றது; இசை மொழியைக் கடந்து மனிதன் மனத்தில் ஒன்றுவது என்றும் கூறித் தமிழிசையை மறுத்துத் தெலுங்கிசையைப் போற்றினர். தமிழ் இலக்கிய வரலாற்றை நன்கு உணர்ந்த பாவேந்தர் இக் கொடுஞ் செயல் கண்டு கொதிப்படைகின்றார். கொதிப்படைந்த பாவேந்தரின் உள்ளத்தில் இருந்து, தெலுங்கிசைத்தால் மறுப்பீர்! தமிழே பாடச் செய்யுங்கள்! அதற்காகத் திரண் டெழுங்கள் இலங்குதமிழ் மொழியினிலே பாடல் இல்லை என உரைத்தால் அறையுங்கள்! தமிழமைப்பு நலமுள்ள இசைக்கு ஒவ்வாது என்பார் வாலை நறுக்குங்கள்! இசைக்கு மொழி வேண்டாம் என்னும் விலங்குகளை வளையுங்கள் * -பாரதிதாசன், தமிழுக்கு அமுதென்று பேர், ப. 67. என்று போர்க்காலக் கட்டளை பிறக்கின்றது. இதனைப் போராடியே நீக்கவேண்டும் என்கின்றார். தமிழ்நாட்டில் நம் தமிழ் பல துறைகளிலும் தாழ்மைப்படுத்தப்பட்டிருக் கின்றது. அத்துறைகளில் சிலவற்றையே இதில் எடுத்துக் காட்டி இருக்கின்றேன். மற்றும் சில துறைகள் பின்னர் ஆகட்டும். இதை நான் எழுதியதின் நோக்கம் என்ன வெனில், தமிழார் வம் மிக்க இளைஞர்கள் இத்தகைய துறைகளில் தமிழ் முன்னேற்றம் கருதி இயன்றவாறு கிளர்ச்சி செய்யவேண்டும் என்பதுதான்' ' என்று வெளிப் படையாகக் கூறுவதையும் இங்குச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது. அவர் இவ்வாறு கூறியதற்குக் காரணம் தமிழும், தமிழிசையும் நாட்டில் ஒதுக்கப்பட்டதே ஆகும்.