பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பாவேந்தர், தெலுங்கிசை தெலுங்கு நாட்டிற்கு வேண்டும். தமிழ் நாட்டில் தமிழிசையே வேண்டும், தமிழிசைப் பாடல்களே வேண்டும் என்று கூறுவதுடன் தின்றுவிடவில்லை. பற்பல தமிழிசைப் பாடல்களை இயற்றினார். அவற்றுள் மயிலம் பூரீசுப்பிரமணியர் துதியமுது, கதர்ப்பாட்டு, முல்லைக்காடு, தாழ்த்தப் பட்டோர் சமத்துவப் பாட்டு, தன் மானத் தாலாட்டு, இசையமுது 1, இசையமுது 2, ஏற்றப்பாட்டு, திராவிடர் திருப்பாடல், இந்தி எதிர்ப்புப் பாடல்கள், தேனருவி முதலியன குறிப்பிடத் தக்கனவாகும். பாவேந்தர் நல்ல இசைஞானம் உடையவர். சங்க காலப் புலவர்களாகிய கண்ணாகனார், நல்லச்சுதனாரைப் போன்று தாம் எழுதிய பாடல்களுக்கு இராகம், தாளம் வகுத்துள்ளார். இது அன்னாரது இசை அறிவுக்குச் சான்று: பகர்ந்து நிற்கின்றது. - பாவேந்தர் நாட்டை, தேசிகம், சஹானா, இந்து ஸ்தான், காபி, தேசிக தோடி, ஆனந்தபைரவி, சங்கரா பரணம், அடாணா, செஞ்சுருட்டி, உசேனி, சாவேரி (மயிலம் பூரீ.சுப்பிரமணிய துதியமுது), ஹார்மோனிய ஸ்வரம், பியாக் (கதர் இராட்டினப்பாட்டு), சங்கராபரண ஜன்யம், கானடா, பிலஹரி, யதுகுலகாம்போதி, காபி, இந்துஸ்தான் தோடி, நீலாம்பரி, (பாரதிதாசன் கவிதைகள் தொகுதி 1), திருஞ்சனி, புன்னாகவராளி, தன்யாசி, சாமா, தோடி, சிந்துபைரவி, மோகனம் (குயில் தொகுப்பு) போன்ற இராக வகைகளைக் குறிப்பிட்டுள்ளார். பாவேந்தர் குறிப்பிட்டுள்ள தாளங்கள், ரூபகம், ஆதி, அடசாப்பு, ஏகம், சாப்பு, (மயிலம் பூரீசுப்பிரமணிய துதியமுது), ஒற்றை (பூரீசுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் என்னும் இதழில் வெளிவந்த பாடல்கள்) அட தாளம் (முல்லைக்காடு), சதுஷ்ரரூபகம், மிசிரசாபு, மி.விர ஏகம், திஷ்ரம், ஆதிதொடி, (பாரதிதாசன் கவிதைகள்: தொகுதி l) சாபு (குயில் தொகுப்பு) போன்றவை.