பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பால்சுப் ւնուo ண்யன் ٭٭٭ இறைவனைத் துதிப்பதற்கு மட்டுமே பயன்பட்ட இசையைப் புதுப்புதுத் துறைகனில் புகுத்தி மக்களைச் சென்றடையச் செய்தார். வண்டிக்காரன், மாடுமேய்ப் பவன், கோடாலிக்காரன், பூக்காரி, குறவர், தபால்காரி, சுண்ணம் இடிக்கும் பெண்கள், பாவோடும் பெண்கள், உழத்தி முதலிய பல்வேறு பாடு பொருட்களைக் கொண்டு இசைப்பாடல்களை யாத்திருப்பது அவர் செய்த பெரும் புரட்சிகளில் ஒன்று. இவ்வாறு இசைப்பாடல்களை எழுதிய பாவேந்தர் இப்பாடல்களைப் பாடகர்கள் நாடெங்கும் பாடுதல் வேண்டும் என்ற வேண்டுதலையும் விடுக்கின்றார். தமிழ்நாட்டின் பாடகரே தமிழ்பாடித் தமிழ்மானம் காப்பீர் நன்றே! -பாரதிதாசன், தமிழியக்கம், ப. 38. தமிழ் இசையைப் போற்றவேண்டும், தமிழ்ப்பாடலையே பாடுதல் வேண்டும் என்று ஏங்கும் பாவேந்தர் அதனைக் குழந்தையை நோக்கிப் பெற்றோர் கூறுவதாக அமைந்த பாட்டின் மூலம் வெளிப்படுத்துகின்றார். அப்பாடல், துன்பம் நேர் கையில் யாழ்.எடுத்து ே இன்பம் சேர்க்க மாட்டாயா?-எமக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா?-நல் அன்பிலா நெஞ்சில் தமிழில்பாடி-ே அல்லல் நீக்க மாட்டாயா?-கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா?-மிக வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே வாழ்வில் உணர்வைச் சேர்க்க-எம் வாழ்வில் உணர்வைச் சேர்க்க-ே அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா?-கண்ணே ஆடிக் காட்ட மாட்டாயா? -பாரதிதாசன், இசையமுது, தொகுதி 2. ப. 48 பா-15