பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்திருத்த இயக்கம் நம்பிக்கை ஒன்றினால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டு வருகின்றது. நம்பிக்கை இல்லை என்றால் நட்பு இல்லை; காதல் இல்லை; அரசு இல்லை; வாழ்வு இல்லை; எதுவுமே இல்லை. உயிருக்கு இறுதி வேண்டு மானால் சந்தேகப்படு' என்பது பழமொழி. தமிழர்களுக்கு நம்பிக்கை உணர்வு மிக மிக அதிகம். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்' என்பதற்கிணங்க அதிக நம்பிக்கை மூடநம்பிக்கையில் சென்று முடிந்தது. மூடநம்பிக்கையால் என்ன பயன் விளையும்? ஒன்று மில்லை. தீமை மட்டுமே விளையும். தமிழர்களின் மூடநம்பிக்கையால் விளைந்த தீமை கொஞ்சமல்ல. கல்வி நாட்டை விட்டு விலகியது; பெண்கள் உரிமை இழந்து அடிமையானார்கள்; காதல் மணம் காற்றாய்ப் பறந்தது; குள்ளத்தனமான குழந்தை மணம் குறைவின்றி நடந்தது; மறுமணம் எண்ணிப் பார்க்கவே கூடாத பாவமாகக் கருதப்பட்டது. மக்கள் தங்கள் உரிமைகளை ஆள்வோர் அ டி க ளி ல் காணிக்கையாக்கி அடிமையானார்கள். சமுதாயம், இவ்வாறு சீர்கெட்ட நிலையில்தான் பாவேந்தர் தோன்றினார். மக்களின் அவலத்தைப் பார்த்து மனம் நொந்தார். இவற்றையெல்லாம் நாட்டை விட்டு ஒட்டியே ஆகவேண்டும் என்ற எண்ணம் அ வி. ப உள்ளத்தில் கருக்கொண்டது. இவ்வெண்ணம் அவரைப் புரட்சிக் கவிஞராக்கியது. அப்புரட்சி உள்ளத்தில் இருந்து,