பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் சாவைத் தொலைத்தேன் - தமிழ்த் தாய்க்கு வாழ்கின்றேன் பா ஒன்றினாலே - தமிழ்ப் பண்பாடு காப்பேன் -பாரதிதாசன், வேங்கையே எழுக, ப. 17. என்ற உறுதிமொழி கனலைக் கக்கிக் கொண்டு வெளி வருகின்றது. தமிழர்கள் சீர்ப்படுதல் வேண்டும். அவர்கள் பண்பாடு பழந்தமிழர் பண்பாடாக மறுமலர்ச்சி அடைதல் வேண்டும். அதற்குப் பண்பாட்டுக் கலப்பு ஒழியவேண்டும். மக்கள் கலந்து வாழலாம். ஒருவர் மொழியை மற்றவர் கற்றுப் பேசலாம். மற்றவர் பண்பாட்டை அறிந்து கொள்ளலாம். ஆனால் அப்பண்பாட்டை அப்படியே பின்பற்ற எண்ணினால் அதனால் தீமை அன்றி நன்மை விளையாது. மேலை நாடுகளில் அவரவர் பண்பாட்டை அவரவர் போற்றி ஒழுகுகின்றனர். நாம் நமது பண் பாட்டை மறந்து யார் யாருக்கோ சொந்தமான பண்பாட்டை எல்லாம் போற்றினோம். அதனால் வந்த கேடு நமது மக்கள் இன்னலிலே வீழ்ந்து துடிக்கின்றனர். இவ் இன்னல்பட்டுத் துடிக்கும் மக்களைப் பாவேந்தர் பார்க்கின்றார். இன்னலிலே தமிழ்நாட்டினி லேயுள்ள என் தமிழ் மக்கள் துயின்றிருந்தார் அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கி என் ஆவியில் வந்து கலந்ததுவே. -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 93. அத்துயரக் காட்சி அவர் ஆவியில் வந்து கலந்துவிட்டது என்கின்றார். ஆவி போகும் வேளையிலும் இதனை மறக்கமாட்டேன்; மறக்க முடியாது என்பது இதன் பொருள். இன்னலில் இருந்து மக்கள் விடுபட வேண்டுமானால் முதலில் மக்கள் சீர்ப்பட வேண்டும், சீர்திருத்தத்தை