பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ஒ. பாலசுப்பிரமணியன் 237 ஏற்றுக் கொள்ள வேண்டும். சீர்திருத்தத்தை நல்ல மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் மக்கள்'ந்ாகரிகம் அடையமுடியாது, இன்னலில் இருந்தும் விடுபடமுடியாது. அதற்குப் பாவேந்தர் பற்பல முறைகளில் சீர்திருத்தம் வேண்டும் என்கின்றார். அவர் காட்டும் சீர்திருத்தங்களுள் பொன்மணிகளாய் விளங்குவன பத்து. அவை 1. கல்வி, 2. பெண் கல்வி, 3. பெண் உரிமை, 4. பெண் விடுதலை, 3. ஆண் பெண் நிகர், 6. காதல் மணம், 7. கலப்பு மணம், 8. மறுமணம், 9. குழந்தை மண ஒழிப்பு, 10. பொது வுடைமை அரசு இப் பத்து வழிகளிலும் சீர்திருத்தம் ஏற்படுமானால் மக்கள் விடுதலை பெறுவர். நாடு முன்னேறும் என்று கருதினார். இவற்றைத் தம் பாடல் களில் மக்களுக்கு விளக்கினார். தாம் எழுதிய கதைப் பாடல்களில் கூட வாய்ப்பு ஏற்படும் இடங்களில் எல்லாம் விளக்கினார். ஏற்படும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்பவன் மனிதன். வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டு அதனைப் பயன்படுத்திக் கொள்பவன் அறிஞன் என்று மனிதனுக்கும் அறிஞனுக்கும் வேறுபாடு கூறுவர். புரட்சி அறிவின் பாற் பட்டது அல்லவா? அதனால் புரட்சிக்கவியும் தாம் பாடிய பாடல்களில் சீர்திருத்தக் கருத்துகளைக் கூறுதற்கு வாய்ப்பில்லாத இடங்களில் கூட வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டு அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றார். குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, வீரத்தாய், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி போன்ற நூல்களில்பாடல்களில்; எத்தனை எத்தனை சீர்திருத்தக் கருத்து களைக் கூறுகின்றார். காதற் பாடல்களில் காதல் நினைவு களில் எத்தனை கருத்துகள் அவரைச் சீர்திருத்தக் கவிஞர்' புரட்சிக் கவிஞர்' என்பதற்குச் சான்று பகர்ந்து நிற்கின்றன. அன்னாரது சீர்திருத்தக் கருத்துகளை எல்லாம் முன்பு கூறிய பத்துத் தலைப்புகளில் தொகுத்துக் காணலாம்.