பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கவிஞருக்கு அளித்தார். இந்நிகழ்ச்சியில் சிலம்புச்செல்வர் ம. பொ. சி., ரா. பி. சேதுப்பிள்ளை, ப. ஜீவானந்தம், டாக்டர் மு. வ., கி. வா. ஜ. முதலிய தமிழறிஞர்களும் கலந்து கொண்டனர். புரட்சிக் கவிஞருக்குப் பண முடிப்புக் கொடுத்த அன்று அவருக்கும் தமக்கும் நடந்த உரையாடலை அறிஞர் அண்ணா கீழ்வருமாறு கூறுகின்றார். புரட்சிக்கவிஞர் ப ா ர தி த ா ச ன் அவர்களுக்கு இருபதாண்டுகளுக்கு முன்னாலே பரிசளிப்பு நடத்தி அவரிடத்திலே பணமுடிப்பும் கொடுத்தான பிறகு அந்தப் பணமுடிப்பை எடுத்துக்கொண்டு ஒரு குதிரை வண்டி ஏறி, திருவல்லிக்கேணியில் அவர் தங்கியிருந்த இடத்திற்குப் போய்க் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் எனக்கும் பெரியாருக்கும் ஒரளவுக்குச் சிறு மனத்தாங்கல்; அதைப் போலவே பாரதிதாசன் அவர்களுக்கும் பெரியாரிடத்தில் ஒரளவு மனத்தாங்கல் இருந்த நேரம். அந்த இரண்டு சூழ்நிலைக்கிடையில் பாரதிதாசன் வண்டியிலே போய்க் கொண்டிருந்த நேரத்தில் என்னிடம் சொன்னார்: நீ கொடுத்திருக்கிற இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நாம் தமிழர்களுக்கென்று ஒர் அரசியல் கட்சி தொடங் கலாம். நீயும் நானும் இருந்து நடத்தலாம் என்று என்னிடத்தில் சொன்னார். நான் அவரிடத்திலே சொன்னேன்: ஐயா, அரசியலுக்கு வர வேண்டாம். நீங்கள் கவிதை உலகத்திலே நடமாடுங்கள்; கவிதை உலகத்திலே நீங்கள் நடமாடுகின்ற உயரத்திற்கு எந்த அரசியல்வாதியும் வர முடியாது. அரசியல்வாதியின் மத்தியில் வந்து இருந்துகொண்டு கவிதை எழுதுவது என்றால் அது அரசியல் கவிதையாகத் தான் இருக்கும்; அதற்கு வயது ஆறுமாதம்தான் இருக்கும். ஆகையினால் நீங்கள் இந்த அரசியல் காரியத்தில் ஈடுபட வேண்டும் என்று கருதாமல், நாங்கள் கொடுத்திருக்கின்ற இந்தப் பணத்தை