பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 1. கல்வி கல்வியே நாகரிகத்தின் அச்சாணி. உலகில் கல்வியறிவு இல்லா மக்களை நாகரிகமடைந்தவர்களாகக் கருதுவ தில்லை. அதனால் பண்டைக்காலந் தொட்டே உலகெங் கிலும் மக்கள் கல்வியைப் போற்றி வந்தனர். அவரவர் கண்டறிந்த எழுத்து முறைகளைக் கொண்டு கல்வி கற்று வந்தனர் என்பதனைக் கிரேக்க நாகரிகம், உரோம நாகரிகம், எகிப்திய நாகரிகம், சுமேரிய நாகரிகம், பாபிலோனிய நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம், மஞ்சள் நதி நாகரிகம் போன்ற தொன்மை மிக்க நாகரிகங்கள் எடுத்துக் காட்டுகின்றன. தமிழகத்திலும் பண்டைக் காலந்தொட்டே கல்வி போற்றி வளர்க்கப் பட்டது. வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது என்று தொல்காப்பியம் கூறுகின்றது. இதனால் திருமணம் நடந்த பின்பும் மக்கள் கல்வி கற்கச் சென்றனர் என்பது புலனாகின்றது. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று வள்ளுவர் கல்வியை மக்களின் கண்களாகப் போற்று: கின்றார். அவ்வளவிற்குக் க ல் வி போற்றப்பட்டது. ஆனால் இடைக்காலத்தில் வேற்றுப் பண்பாடு தமிழகத்தில் கலக்கத் தொடங்கியது. இதனை மன்னர்களும் ஆதரித் தனர். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி' என்பதற்கு இணங்க மக்களும் ஏற்கத் தலைப்பட்டனர். இதனால் கல்வி பொதுமக்களுக்குக் கிட்டாத கனியாகியது. ஒரு குறிப்பிட்ட வருணத்தாருக்கே கல்வி உடைமையானது , மக்கள் கல்வி இல்லாமல் கண்ணிருந்தும் குருடர்களா னார்கள். இதனால் குருட்டு நம்பிக்கைகளைக் கண்களை மூடிக் கொண்டு ஏற்றனர். அந் நம்பிக்கைகள் அவர்களைப் படுகுழியில் தள்ளின. இந்நிலையில் தோன்றிய பாவேந்தர்,