பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 239 என்னருங் தமிழ்நாட்டின் கண் எல்லோரும் கல்வி கற்றுப் பன்னருங் கலை ஞானத்தால் பராக்கிரமத்தால் அன்பால் உன்னத இமய மலைபோல் ஓங்கிடும் கீர்த்தி எய்தி இன்புற்றார் என்று மற்றோர் இயம்பக் கேட்டிடல் எந்நாளோ? - -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, 197. என்று ஏக்கம் கொள்கின்றார். கல்வி எல்லாருக்கும் கிட்டுவதாக இருத்தல் வேண்டும், அது மட்டுமல்ல எல்லாக் கல்வியும் எல்லாருக்கும் கிட்டுவதாக இருக்க வேண்டும். அதற்குத் தாய்மொழியின் மூலமே எல்லாக் கல்வியும் பயிற்றுவித்தல் வேண்டும். மக்கள் அனைவருக்கும் தாய்மொழியாகிய தமிழ் கட்டாயம் தெரிந்திருக்கும். அதனால் அவர்கள் எத்துறையை விரும்புகின்றனரோ அதில் விரும்பிக் கற்பர். இன்று எல்லாத் துறைகளையும் தமிழ் மக்கள் அனைவரும் கற்கும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது. ஆங்கில மொழி அறிவு இருந்தால்தான் சில முக்கியத் துறைகளைக் கற்க முடியும் என்ற நிலை இருக்கின்றது. இந்நிலை மாறினால்தான் -- தமிழ்மொழி யிலேயே அனைத்துப் பாடங்களையும் கற்பித்தால்தான் எல்லாக் கல்வியும் எல்லாருக்கும் கிட்டும். இதனைத் தமிழ் இயக்கத்தில் விரிவாகக் கண்டோம். இத்தகைய நிலை இங்கு ஏற்படுமானால் என்னென்ன நடைபெறும் என்று பாவேந்தர் நினைத்துப் பார்க்கின்றார். அதற்கு, இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும்! சுகம் வரும்! நெஞ்சில் தூய்மை உண்டாகிவிடும், வீரம் வரும் -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1. ப. 193. என்று கூறுகின்றார்.