பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34% புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ೩:ಕಿ:ಆಸ್ಟಿಕೆಳ್ಗೆ: சில உரிமைகள் உண்டு. எ த்து 1மை, ப்ச்சுரிமை, H Too. - リ 『 リ எத்தொழிலையும் Թտնպմ உரிம்ை, எச்சமயத்தையும் தழுவும் உரிமை போன்றவை அவ்ற்றுள் சில. ஆனால் பாவேந்தர் காலத்தில் (கல்வியின் தேவை குறித்துப் பாடல் எழுதிய காலத்தில்) கல்வி அனைவருக்கும் உரிய ஒன்றாக இல்லை. ஒருசில மக்களுக்கே கல்வி என்பது இருந்தது. அனைவருக்கும் கல்வி, கட்டாயம் என்று சட்டம் செய்யாது அனைவருக்கும் வாக்குரிமை என்று சட்டம் இயற்றப் பட்டது; இதனால் நாட்டிற்குத் தீமை அல்லவா வளரும் என்று பாவேந்தர் சிந்திக்கின்றார். சிந்தித்து, கல்வி இருட்டிற்குக் கலங்கரை விளக்கு யாவருக்கும் வாக்குரிமை இருக்கும் இந்நாட்டில் யாவர்க்கும் கல்வி இருக்க வேண்டும் -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 4, ப. 192. என்று கூறுகின்றார். கல்வி அறிவு இல்லாத மக்கட்கு வாக்குரிமை தருவதால் தீமையே மிகுதி. அவர்கள் கையில் ஆயுதத்தைக் கொடுத்து கண்ணைக் கட்டிவிட்டதைப் போன்று தீமை விளைக்கும். முதலில் அவர்களுக்குக் கல்வி கட்டாயம் என்று ஆக்கிப் பின்பு வாக்குரிமை கொடுத்தல் நன்று. இந்தியநாட்டில் 100-க்கு 67 பேர் கல்வி அறிவு அற்றவர் களாக உள்ளனர். உலகத்தில் கல்வி அறிவு அற்றவர்களில் கிட்டத்தட்டப் பாதிப் பேர் இந்தியாவில் உள்ளனர் என்று கணக்கெடுத்துக் கூறியுள்ளனர். அனைவருக்கும் கல்வி, கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி என்று திட்டங்கள் தீட்டியும் இந்த நிலையில் மக்கள் உள்ளனர். இந்நிலை உடனே மாறவேண்டும் என்று விரும்பிய பாவேந்தர், கல்வியின் இன்றியமையாமையைப் பரக்கக் கூறுகின்றார்; புரட்சிக்கனல் தெறிக்கக் கூறுகின்றார். இதனை,