பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 24. எல்லா கலமும் ஈந்திடும் கல்வி இல்லா வீட்ட்ை இருண்ட வீடென்க! படிப்பில்லார் நிறைந்த குடித்தனம், நரம்பின் துடிப்பில்லார் நிறைந்த சுடுகாடு என்க அறிவே கல்வியாம் -பாரதிதாசன், இருண்ட வீடு, ப. 45. என்னும் அடிகளின் வாயிலாக அறியலாம். அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்பார் வள்ளுவர். இதனை அடியொற்றியே பாவேந்தர் எல்லா நலமும் ஈந்திடும் கல்வி" *அறிவே கல்வியாம்' என்கின்றார். எனவே எக்குறை வந்தாலும் நிற்காது கற்க வேண்டும் என்கின்றார். இல்லார்க் கெல்லாம் ஈண்டுக் கல்வி வந்தது.எனில் கடைத்தேறிற்று உலகே’ -பாரதிதாசன், இருண்ட வீடு, ப. 45. என்று உலகம் கடைத்தேற வழியும் கூறுகின்றார்; உறுதியாகக் கூறுகின்றார். கல்வி இல்லை என்பதே நாட்டில் இல்லாமல் போக வேண்டும் என்பதனை, இல்லை என்பது கல்வி இல்லாமையே உடையர் என்பவர் கல்வி உடையரே! . -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 4, ப. 127. என்பதன் மூலம் கூறுகின்றார். எல்லோருக்கு கல்வி உண்டானால் நாட்டில் இல்லாமை ஒடிவிடும் என்று முரசே நீ கொட்டிக் கொட்டி மக்களுக்கு அறிவி என்கின்றார். இல்லாமை என்னும் பிணி இல்லாமல் கல்வி நலம் எல்லோர்க்கும் என்று சொல்லிக் கொட்டுமுரசே - வாழ்வில் பொல்லாங்கு தீர்ந்த தென்று கொட்டு முரசே -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 2, ப. 136.