பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்று கல்வியின் இன்றியமையாமையை எடுத்துக்கூறிச் சமுதாயம் சீர்திருந்த வேண்டுமானால் முதலில் மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்கின்றார்: 2. பெண் கல்வி பெண்கள் விழிப்புணர்ச்சி அடைந்து உரிமை பெற்று. விடுதலை ஆகவேண்டுமானால் அவர்களுக்கு முதலில் கல்வி புகட்ட வேண்டும். கல்வி இல்லாப் பெண்களால் எப்பயனும் இல்லை. பயன் இல்லாதது மட்டுமல்ல அவர்களால் தீமையே ஏற்படும். * படியாத பெண்ணினால் தீமை - என்ன பயன் விளைப்பாள் அந்த ஊமை?' -பாரதிதாசன், இசையமுது, தொகுதி 1, ப. 47. என்று கேட்கின்றார் பாவேந்தர். சங்க காலத்தில் பெண்கள் கல்வி கற்று வந்தனர் என்பதனைச் சங்கப் புலவர்கள் பெயர்களில் பெண்பாற். பெயர்கள் இருப்பதிலிருந்து அறிகின்றோம். ஒளவையார், ஆதிமந்தியார், வெள்ளிவீதியார், உலோச்சனார், காக்கை பாடினியார், நச்செள்ளையார் போன்றவர்கள் சிறந்த பெண்பாற் புலவர்களாக விளங்கினர். சங்க காலத்திற்குப் பிறகு வேற்றுச் சமயம், வேற்று நாகரிகம், வேற்றுப் பண்பாடு போன்றவை தமிழகத்தில் பரவியதால் பன்னெடுங் காலமாகப் போற்றி வளர்க்கப்பட்ட பெண்கல்விக்குத் தடை ஏற்பட்டது. கல்வி போனதால் பெண்கள் கண்ணிழந்தவர்களானார்கள். மிக எளிமையாக, அடக்கி யாளும் ஆண் இனத்திற்கு அடிமையானார்கள். சமையற் கட்டிலும் பள்ளி அறையிலுமே அவர்கள் வாழ்க்கை முடிவுற்றது. இதற்குக் காரணம் ஆண் இனத்தின் அடக்கி ஆளும் எண்ணமே என்று பாவேந்தர் கருதினார்.