பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் - 243. புவிக்கொன்று உரைப்பேன் புருஷர் கூட்டம் பெண்களை ஆதிப்பெருநாள் தொடங்கி திருந்தா வகையிற் செலுத்தலால் சுருங்கிய உள்ளம் விரிந்த பாடில்லை. -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 54. பெண்களின் உள்ளம் விரிவடைந்து அவர்கள் நன்மதிப்புப் பெற வேண்டுமானால் அவர்களுக்குக் கல்வி அறிவு மிகமிக இன்றியமையாதது. கல்வி, பெண்களுக்குக் கிடைக்க அவர்களின் பெற்றோர்கள் வழிவகை செய்ய வேண்டும். பெண் பிள்ளை தானே படிக்க வேண்டாம் என்று எண்ணுதலோ அல்லது அதிகம் படிக்க வேண்டாம் என்று. கருதுதலோ கூடாது. அவ்வெண்ணத்தை விட்டொழித்தல் வேண்டும். பெண்கள் திருமணம் ஆகும்வரை பெற்றோர் களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே உள்ளனர். இளமையில் கல்' என்பது பழமொழி. எனவே பெண்கள் கற்க அவர் களின் பெற்றோர்கள் பெருமுயற்சி எடுத்தல் வேண்டும் என்று பெண் கல்விக்கு ஆணிவேராக இருக்கும் பெற். றோரிடம் முறையிடுகின்றார் பாவேந்தர். பெற்றங்ல் தந்தைதாய் மாரே - நும் பெண்களைக் கற்க வைப்பீரே இற்றைநாள் பெண்கல்வி யாலே - முன் முன்னேற வேண்டும் வைய மேலே -பாரதிதாசன், இசையமுது, தொகுதி. 1. ப. 47. என்று முறையிடுகின்றார் பாவேந்தர். மூடநம்பிக்கைகள் நாட்டில் மலிந்து இருப்பதற்குக் காரணம், பெண்களுக்குக் கல்வி இல்லாமையே! நம் நாட்டில் கல்வி அறிவு இல்லாதவர்களில் எழுபது விழுக் காட்டினர் பெண்களே! அதனால்தான் மூடநம்பிக்கை களைப் பெண்களே போற்றி ஒழுகுகின்றனர். மூடநம்பிக் கைகள் நாட்டிலிருந்து விலக வேண்டுமானால் அதற்குப் பெண்கள் கல்வி கற்றல் வேண்டும். உயர்தரக் கல்வி கற்க வேண்டும்.