பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கலையினில் வளர்ந்தும், காட்டுக் கவிதையில் ஒளி மிகுந்தும் நிலவிடும் நிலா முகத்து " லேப்பூ விழி மங்கையர் தலையாய கலைகள் ஆய்ந்து தம்வீடு போதல் கண்டேன் உலவிடு மடமைப் பேயின் உடம்பின்தோல் உரிதல் கண்டேன் -பாரதிதாசன், அழகின் சிரிப்பு, ப. 63. பெண்கள் கல்வி கற்கத் தொடங்கினால் மடமைப்பேயின் தோல் உரியத் தொடங்கிவிடும் என்று பாவேந்தர் கூறுகின்றார். சிலர் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?" என்று எண்ணுகின்றனர். பெண்கள் அடுப்பூதும் வேலையை மட்டும் செய்வார்களானால் அவர்களுக்குப் படிப்பு வேண்டாம். ஆனால் அவர்கள் அதனை மட்டும் செய்வதில்லை குடும்பத்தின் பொறுப்பேற்று அதனைக் காக்கின்றனர். குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்கின்றனர். இல்லறத்தில் காக்கும் பணிகளை எல்லாம் பெண்களே செய்கின்றனர். அவர்களுக்குக் கல்வி அறிவு இல்லை என்றால் அவற்றைச் செம்மையாகச் செய்ய முடியுமா? பெண் கல்வி எதற்காக வேண்டும் என்பதற்குப் பாவேந்தர்: பெண்கட்குக் கல்வி வேண்டும் குடித்தனம் பேணுதற்கே பெண்கட்குக் கல்வி வேண்டும் மக்களைப் பேணுதற்கே பெண்கட்குக் கல்வி வேண்டும் உலகினைப் பேணுதற்கே பெண்கட்குக் கல்வி வேண்டும் கல்வியைப் பேணுதற்கே! -பாரதிதாசன், குடும்பவிளக்கு, பகுதி2, ப. 22.