பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 245, என்று பட்டியல் போட்டு விடை கூறுகின்றார். இதில் கல்வியைப் பேணுதற்குப் பெண்கல்வி வேண்டும் என்று அவர் கூறுவது புரட்சிக்கருத்து சமுதாயத்தைக் கூர்ந்து நோக்கிக் கூறிய கருத்தாகும். ஒரு பொருளை முக்கியமாகப் பாதுகாக்கவேண்டும் என்றால் அதனைப் பெரும்பாலும் மனைவியிடம் கொடுத்து வைப்பர். அவளே அதனைப் பாதுகாத்து வருவாள். எதனையும் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு பெண்களுக்கு அதிகம். கல்வியை நாட்டில் பாதுகாக்க வேண்டுமானால் அதனைப் பெண்களிடம் கொடுங்கள் அவர்கள் செம்மையாகப் பாதுகாப்பர் என்கின்றார். எனவே கல்வி காக்கப்பட வேண்டுமானால் அதற்குப் பெண் கல்வி மிக இன்றியமையாதது என்பது தெரிகின்றது. பெண்களுக்கு எது அழகு? என்ற கேள்விக்கு ஒரு பழம்பாடல் விடையிறுக்கின்றது. குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு." புற அழகைவிட அக அழகே உயர்ந்தது. இவ்வக அழகு. மெருகு பெற்று ஒளிரக் கல்வி இன்றியமையாதது. கல்வி இல்லாத பெண்களைக் களர் நிலத்துடன் ஒப்பிடுகின்றார் பாவேந்தர். கல்வியில் லாத பெண்கள் களர்கிலம்! அங்கிலத்தில் புல்விளைந் திடலாம்; நல்ல புதல்வர்கள் விளைவதில்லை! டபாரதிதாசன், குடும்பவிளக்கு, பகுதி 2, ப. 22. என்கின்றார். புதல்வர்களை வளர்க்கும் பெண்களுக்குக் கல்வி அறிவு இல்லை என்றால் அவர்களால் வளர்க்கப்