பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பெறும் குழந்தைகள் அறிவுக் குறைபாடு உடையவர்களாக இருப்பர். கல்வி அறிவு உடைய பெண்கள் மேற்கூறிய பெண்களுக்கு எதிரானவர்கள். கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி, அங்கே நல்லறிவு உடைய மக்கள் விளைவது நவிலவோ நான்? -பாரதிதாசன், குடும்பவிளக்கு, பகுதி 2, ப. 22. என்கின்றார் பாவேந்தர். கல்வி அறிவு உடைய பெண் களால் உருவாக்கப் பெறும் குழந்தைகள் நல்லறிவு உடைய அறிஞர்களாக விளங்குவது உறுதி. இதில் ஐயம் வேண்டாம் என்கின்றார். எனவே ஆண்கள் அறிஞர்களாக விளங்கப் பெண்களுக்குக் கல்வி அறிவு இருத்தல் வேண்டும். நம் நாட்டவரால் மேலை நாட்டவரோடு அறிவியலில் போட்டி போட முடியவில்லை. அத்ற்குக் காரணம் அந்நாடுகளில் பெண்கள் சிறந்த கல்வி அறிவு பெற்றுத் திகழ்கின்றனர். இங்குப் பெண்கல்வி என்பது இல்லை. அதனால் சிறந்த அறிஞர்கள் அங்கு உருவாகின்றனர். அங்குள்ள பெண் களால் சிறந்த முறையில் அறிவு ஊட்டப் பெற்றுக் குழந்தைப் பருவத்திலேயே நுண்மாண் நுழைபுலம் பெற்ற வர்களாக விளங்குகின்றனர். ஆனால் இங்கு அதற்கு எதிர்மறையாக அல்லவா உள்ளது. கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம். அங்குப் புல் விளைந்திடலாம், ஆனால் நல்ல புதல்வர்கள் விளைவதில்லை என்று பாவேந்தர் கூறுவது முழுக்க முழுக்க இன்றளவும் உண்மை யாக அல்லவா தோன்றுகின்றது. நாம் அறிவியலில் மேலைநாட்டுடன் போட்டியிட்டு வளரவேண்டுமானால் நம் நாட்டுப் பெண்கள் கல்வி அறிவு பெற்றுத் திகழ வேண்டும் என்று பாவேந்தர் கருதினார் போலும். இவ் வெண்ணத்திலேயே இப்பாடல் உருவாகி இருக்க வேண்டும். கல்வி கற்கும் பெண்களைப் போற்றுதல் வேண்டும். கல்வி கற்கும் பெண்கள் அடங்காப் பெண்களாக