பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 247 இருப்பர் என்றும், கணவனை மதித்தொழுகாப் பெண்களாக இருப்பர் என்றும் எண்ணுதல் கூடாது. பெண் கல்வியை மறுப்பவரே இத்தகைய எண்ணங்களை மக்கள் உள்ளத்தில் ஏற்படுத்துவர். இதனை ஏற்காது கல்வி கற்கும் பெண் களைப் போற்றுதல் வேண்டும் என்று வற்புறுத்துகின்றார் பாவேந்தர். கற்ற பெண்களை இந்த நாடு-தன் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அன்போடு. -பாரதிதாசன், இசையமுது, தொகுதி 2, ப. 48. எனவே பெற்றோர்கள் பெண்களைக் கல்வி கற்கச் செய்தல் வேண்டும். தம் புதல்வி கல்வி கற்க வேண்டும், இலக்கண இலக்கியங்களிலும் தேர்ச்சி பெறுதல் வேண்டும், அவள் படித்ததை எல்லாம் தமக்குத் தக்க நேரத்தில் எடுத்துக் கூற வேண்டும் என்று ஏங்கும் பெற்றோரின் உள்ளத்தைப் பாடலில் வடிக்கின்றார். அறமிதென்றும் மறமிதென்றுமே அறிகிலாத போது-யாம் அறிகிலாத போது-தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒருசொல் இயம்பிக் காட்ட மாட்டாயா?-ே இயம்பிக் காட்ட மாட்டாயா? புறமிதென்றும் கல் அகமிதென்றுமே புலவர் கண்ட நூலின்-தமிழ்ப் புலவர் கண்ட நூலின்-கல் திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச் செல்வமாக மாட்டாயா?-தமிழ்ச் செல்வமாக மாட்டாயா? -பாரதிதாசன், இசையமுது, தொகுதி 2, ப. 48. இத்தகைய ஏக்கம் பெற்றோரின் உள்ளங்களில் ஏற்படுதல் வேண்டும். அப்பொழுதுதான் பெண்களைப் பள்ளிக்கும் கல்லூரிக்கும் அனுப்பும் உறுதி ஏற்படும். பெண் கல்வியைப்