பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப் பிரமணியன் 23 வைத்துக் கொண்டு இந்தியாவில் உள்ள பெரிய மலை களுக்கெல்லாம் சென்று வாருங்கள்; நதிகளுக்கு எல்லாம் சென்று வாருங்கள்; பொழில் எல்லாம் கண்டு வாருங்கள்: மக்களை எல்லாம் பார்த்து வாருங்கள்; அவைகள்ை எல்லாம் பார்த்துப் பார்த்து நீங்கள் பெறுகின்ற நல்ல கருத்துகளைக் கவிதை வடிவத்திலே கொடுங்கள். அதற்குத்தான் இந்த விழா நடந்தது' என்று நான் சொன்னேன். என்னை அரசியலுக்கு வர வேண்டாம் என்று அண்ணாதுரை தடுத்து விட்டானே என்று அவர் வருத்தப்பட்டார். இந்த அரசியலிலே இருந்துகொண்டு நான் படுகின்ற அல்லலை அவர் பார்த்திருப்பாரானால் அவருக்கு சொன்னதை - அது எவ்வளவு நல்லது என்பதை உனர்ந்திருப்பார்." பாவேந்தரின் படைப்புகள் தொடக்க காலத்தில் பாவேந்தர் தேசிய தெய்வத் தொடர்பான கவிதைகளை இயற்றினார். பகுத்தறிவு இயக்கத்தில் ஈடுபட்ட பின்னர் அவரது பார்வை தமிழ் மொழி, தமிழினம், சமய மறுப்பு, கைம்பெண் மறுமணம், தொழிலாளர் நிலை முதலியவற்றின் மீது சென்றது. பாரதிதாசன் முதல் கவிதைத் தொகுதி (குஞ்சிதம் குருசாமி வெளியிட்டது) 1938-ல் வெளிவந்தது. பண்டிதர் உலகம், புதிய இலக்கியவாணர் உலகம், சீர்திருத்த உலகம் ஆகிய அனைத்துப் பகுதியினரின் பாராட்டையும் ஒருங்கே பெற்றது. பெரியார் இராமசாமி, வ. ரா., ஆர், கே. சண்முகம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், கே. சுவாமி நாதன், ம ைற ம ைல ய டி. க ள், வையாபுரிப்பிள்ளை, அண்ணாதுரை, சாரநாத ஐயர் போன்ற பெருமக்கள் யாவரும் இப்புதிய கவிதைத் தொகுதியைப் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்கள். புதிய இலக்கிய உலகில் இக் கவிதைத் தொகுதி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.