பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் போற்றிப் பாவேந்தர் எழுதிய பாடல்கள் மிகப்பல அவற்றுள் மணிமகுடமாகத் திகழ்வது கீழ்வரும் பாடல்: தலைவாரிப் பூச்சூடி உன்னைப் - பாட சாலைக்குப்போவென்று சொன்னாள் உன் அன்னை! சிலைபோல ஏன் அங்கு கின்றாய்? - நீ சிந்தாத கண்ணிரை ஏன் சிந்துகின்றாய்? விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி வேளைதோறும் கற்றுவருவதால் படியும்! மலைவாழை அல்லவோ கல்வி? - நீ வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி. படியாத பெண்ணாய் இருந்தால் - கேலி பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்! கடிகாரம் ஓடும்முன் ஒடு! - என் கண்ணல்ல? அண்டைவீட்டுப் பெண்களோடு! கடிதாய் இருக்கும் இப்போது! கல்வி கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது! கடல்சூழ்ந்த இத்தமிழ்நாடு - பெண் கல்வி பெண் கல்வி என்கிறது அன்போடு. -பாரதிதாசன், இசையமுது தொகுதி 2, ப. 58. 3. பெண்ணுரிமை

  • உன் உரிமையை நீ பாதுகாத்துக் கொள்ள வேண்டு மானால் மற்றவர் உரிமையைப் போற்றக் கற்றுக் கொள்' என்பர் அறிஞர் அதற்கிணங்க ஆண் இனம் தன் உரிமையைப் பாதுகாக்க வேண்டுமானால் பெண் ணுரிமையைப் போற்றுதல் வேண்டும். மேலை நாடுகளில் பெண்கள் முழு உரிமை பெற்றுத் திகழ்கின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இதனைக் கண்டு சீறி எழுந்த புரட்சிக்கவி பாவேந்தர் பெண்களுக்கு உரிமை வேண்டும் உரிமை வேண்டும் என்று முரசு கொட்டி ஆர்ப்பரிக்கின்றார். பெண்களுக்குப் பேச்சுரிமை வேண்டும்; காதலிக்க உரிமை