பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் காதல் உணர்வே உயிரின் இயற்கை மாதர் மட்டும் சூளைக் கல்லோ? டபாரதிதாசன் காதற் பாடல்கள், ப. 161. காதல் உணர்வு என்பது மனிதர்கட்கு மட்டுமல்லாது உலகத்தில் உள்ள எல்லா உயிர்கட்கும் இயற்கையானது. எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்" என்பார் தொல்காப்பியனாரும். இந்நிலையில் பெண்கள், காதல் செய்தல் கூடாது என்பது இயற்கையோடு இயைந்த நெறியாகாது. எனவே பெண்களுக்குப் பேச்சுரிமையுடன் காதல் உரிமையும் வேண்டும் என்கின்றார். வீட்டில் பெண்கள் நிலை என்ன? வீட்டிற்குள் பெண் களுக்கு எவ்வளவு கட்டுப்பாடு: இலாயத்தில் குதிரை களைக் கட்டிப் போடுவதைப் போல் அல்லவா பெண்களை விட்டில் அடைத்து வைத்திருக்கின்றோம். இதைக்கண்டு பதைப்பதைப் பாவேந்தர், தனித்துக் கிடந்திடும் லாயம் - அதில் தள்ளி அடைக்கப்படும் குதிரைக்கும் கனைத்திட உத்தரவு உண்டு - வீட்டில் காரிகை காணவும் அஞ்சவும் வேண்டும் டபாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 112. என்று கூறுகின்றார். பெண்கள் அடிமையானதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று கல்வி இல்லாமை. மற்றது அச்சமும் நாணமும் மிகையாக இருப்பது. இதனை உணர்ந்த பாவேந்தர் முதலில் கல்வி வேண்டும் என்றார். பின்பு, அச்சமும் நாணமும் இல்லாப் பெண்கள் இந்த நாட்டின் இரு கண்கள் என்று கூறி, தேவையற்ற அச்சத்தையும் நாணத்தையும் பெண்கள் நீக்கு த வேண்டும எனகின்றார். பெண்களுக்கு