பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 251 நாணம் தேவைப்படும் இடத்தையும் கூறுகின்றார். அதனைப் பின்பு காண்போம். இவ்வாறு பெண்கள் வீட்டில் உரிமை பெற்றுத் திகழ வேண்டும் என்கின்றார். நாட்டைக் காக்கும் பணியிலும் பெண்களுக்கு உரிமை வேண்டும் என்கின்றார். தமிழ் காத்து நாட்டினைக் காப்பாய் - பெண்ணே தமிழரின் மேன்மையைக் காப்பாய் தமிழகம் கமதென்று ஆர்ப்பாய் தடையினைக் காலினால் தேய்ப்பாய் -பாரதிதாசன் இசையமுது, தொகுதி 1, ப. 53. என்பதன் மூலம் நாட்டைக் காக்கும் உரிமை பெண்களுக்கு வேண்டும் என்பதனை உணர்த்துகின்றார். பேச்சுரிமை, காதல் செய்ய உரிமை, வீட்டில் உரிமை, நாட்டைக் காப்பதில் உரிமை என்று ஒவ்வொரு நிலையிலும் பெண் களுக்கு உரிமை வேண்டும் என்கின்றார். 4. பெண் விடுதலை பெண் கல்வி, பெண் உரிமை இரண்டும் பெண் விடுதலையை மையமிட்டதாக இருத்தல் வேண்டும். பெண் விடுதலை பெறா நாடு மண் விடுதலையும் பெறுதல் இயலாது. பெண்ணடிமை தீருமட்டும் பேசுங் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 3. என்கின்றார் பாவேந்தர் பெண் விடுதலை பெறாத வரையில் நாடு விடுதலை பெற முடியாது’ என்கின்றார் காந்தி அடிகள். பெண்களை அடிமைகளைப் போல் நடத்துதலைப் பாவேந்தர் கண்டிக்கின்றார். திருமணம் ஆகும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தச் சமூகம் செய்யும் கொடுமை எவ்வளவு? திருமணத்திற்கு அவள் மன விருப்பத்தை