பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் யாரும் கேட்பதில்லை, திருமணத்திற்கு முன்பு அவளின் எதிர்கால மணவாளனை அவளுக்குக் காட்டுவதில்லை. இதனைக் கண்டு மனம் பொறாத பாவேந்தர் திருமணம் ஆகாத பெண்ணை நோக்கிக் கூறுகின்றார். கல்யாணம் ஆகாத பெண்ணே உன் கதிதன்னை நீ கிச்சயம் செய்க கண்ணே! வல்லமை பேசியுன் வீட்டில் - பெண் வாங்கவே வந்திடுவார்கள் சிலபேர்கள் நல்லவிலை பேசுவார் - உன்னை நாளும் நலிந்து சுமந்த பெற்றோர்கள் கல்லென உனைமதிப்பார் - கண்ணில் கல்யாண மாப்பிள்ளை தன்னையுங் காட்டார்: வல்லி உனக்கொரு நீதி - இந்த வஞ்சகத் தரகருக்கு நீ அஞ்ச வேண்டாம். -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 116, அஞ்சாது செய்யத் தக்கதொன்று உண்டு. அது, கனத்த உன் பெற்றோரைக் கேளே! - அவர் கல்லொத்த நெஞ்சையுன் கண்ணிரினாலே கனைத்திடுவாய்; அதன் மேலும் - அவர் ஞாயம் தராவிடில் விடுதலை மேற்கொள் டபாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 117. என்கின்றார்; அடிமை செய்யும் பெற்றோரிடம் இருந்து விடுதலை பெறு என்று கூறுகின்றார். உன்னுடைய உரிமை எங்கெங்குப் பாதிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் உரிமைக்காகப் போராடி விடுதலை பெறு. பெற்ற விடுதலையை நன்முறையில் பயன்படுத்திக் கொள் என்று மேலும் கூறுகின்றார். ஒன்று சிறிதும் நாகரிகமின்றிச் சில இடங்களில் பெண்கள் இருளில் மூழ்கிக் கிடப்பது: மற்றொன்று, பழுத்த நாகரிகம் என்னும் பேய்க்குச் சில இடங்களில் பெண்கள் இரையாகி வாழ்வைக் குலைத்துக் கொள்வது. இருசாராரும் ஒழுங்குபட்டுப்