பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 253 பெண்மை உடையவராய் உலகிற்குப் பயன்படுதல் வேண்டும் : என்று திரு. வி. க. கூறுவதை இங்கு ந்ெதித்தல் நலம். இதனை நன்கு சிந்தித்திருக்கின்றார் பாவேந்தர். அத்தகைய நிலைக்குப் பெண்கள் விடுதலை என்ற பெயரால் சீரழிவதைப் பாவேந்தர் விரும்பவில்லை. . அதனால் பெண்ணை நோக்கிக் கூறுகின்றார். முத்து வரும் என்று - நீ முறை தவற வேண்டாம் கனியத் தமிழ் பாடு - பெண்ணே கச்சேரி செய்யாதே சினிமாவிற் சேர்ந்து 一高 தீமை அடையாதே! தனித்து வரும் போது - கெட்ட தறுதலை கண் வைத்தால் இனிக்க கலம் கூறு - பெண்ணே இல்லாவிடில் தாக்கு -பாரதிதாசன், குடும்ப விளக்கு, பகுதி 3, ப. 13. என்கின்றார். இல்லையென்றால் உன் பெண்மை பறி போகும். பெண்மையே பெண்களுக்கு ஆபரணம். அது இல்லாதபோது அவள் அழகாக இருப்பது எப்படி? மற்ற நகைகளால் உண்மையான அழகைப் பெற முடியுமா? எனவே பெண்மையைப் போற்றி வாழ் என்கின்றார். முன்பு அச்சமும் நாணமும் இல்லாப் பெண்கள் நாட்டின் இரு கண்கள் என்றார். அது தேவையற்ற அச்சத்தையும் தேவையற்ற நாணத்தையும் குறித்தது. ஆனால் இங்கு கற்பை இழப்பதில் அஞ்சவேண்டும் என்றும், அஞ்சவேண்டிய இடமும் கூறினார். மேலும் நாணம் இருக்க வேண்டிய இடங்களைக் கூறுகின்றார்.