பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கு டு ம் ப விளக்கில், வேடப்பனும் நகைமுத்தும் காதலர்கள். அவர்களின் உரையாடல் மூலம் பெண்கள் நாணப்படும் இடத்தை முதலில் கூறுகின்றார். நகைமுத்தை விரும்புகின்றேன் நாளைக்கே மணக்க வேண்டும் வகை செய்க அப்பா என்று வாய்விட்டு நானா சொல்வேன்? நிகரற்றாய் உன் பெற்றோர் பால் நீ சொன்னால் என்ன! என்றான் மகளுக்கு நாண மில்லை என்பார்கள், மாட்டேன் என்றாள். -பாரதிதாசன், குடும்ப விளக்கு, பகுதி 3; ப 13. தமது காதலைத் தாமே பெற்றோரிடம் கூறுதற்குப் பெண்கள் நாணப்படுதல் வேண்டும். கிழவன் தன்னொடுங் கிழத்தி தன்னொடும் நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது என்று தொல்காப்பியனார் கூறுகின்றார். அக வாழ்க் கையில் காதலைப் பற்றித் தலைமகனுடனும் தலைமகளு டனும் நற்றாய் கூறாள் என்றால் இவர்களும் அவர்களி டத்துக் கூறுதல் இல்லை என்பது பெறப்படுகின்றது அல்லவா? தொல்காப்பியனார் கூறும் இப்பண்பாட்டைப் பாவேந்தர் கு டு ம் ப விளக்கில் போற்றுகின்றார். அதனால் அன்றோ பெருமாள் தாத்தா வாயிலாக அவர்களின் காதலைப் பெற்றோரிடம் தெரியப்படுத்துவ தாகக் காட்சி அமைக்கின்றார். பெண்கள் கருவுற்றிருப்பதைத் தங்கள் கணவர்க்கு உணர்த்த மிகவும் நாணப்படுவர். இது தமிழ்ப் பெண் களிடம் தொன்றுதொட்டு இன்றளவும் பயின்று வரும் பண்பாடாகும். இப்பண்பாட்டைக் குலைத்தால் அக வாழ்வில் இன்பம் முழுமையாகக் கிட்டாது. இத்தமிழ்ப்