பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 255 பண்பாட்டை விளக்கும் ஒரு காட்சியினைக் குடும்ப விளக்கி லேயே காட்டுகின்றார் பாவேந்தர். நகைமுத்து சூல் உற்றுள்ளாள். இதனைத் தின் மணவாளனாகிய வேடப்பனுக்கு உணர்த்த வேண்டிய நிலை. தொன்றுதொட்டு வந்த நாணம் தடுக்கின்றது. எனினும் உணர்த்தியே ஆக வேண்டிய நிலை. அந்நிலையில் அவள், தன் மூன்று விரல்கள் காட்டி முகநாணிக் கீழ்க் கண்ணாலே முன் நின்றான் முகத்தைப் பார்த்து -பாரதிதாசன், குடும்ப விளக்கு, பகுதி 4, ப. 15. நிற்கின்றாள். எனவே புறவாழ்வில் தேவையற்ற அச்சமும் நாணமும் வேண்டாம் என்று கூறியவர், அகவாழ்வில் தமிழர்களின் பண்பாட்டில் கட்டாயம் நாணமும் அச்சமும் வேண்டும் என்கின்றார். 5. ஆண் பெண் நிகர் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே" என்றார் பாரதியார். அவர் அடியொற்றிச் சென்ற புரட்சிக்கவி பாரதிதாசனும் இதனை ஒவ்வொரு நிலை யிலும் உயிரெனப் போற்றுகின்றார். கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப் போம் என்றார் பாரதியார். பாவேந்தர் ஒரு படி மேலே சென்று இடித்துக் கூறுகின்றார். ஆண்கள் பெண் களிடம் கற்பை எதிர்பார்த்து நிற்கின்றனர். ஆனால் தாங்கள் கற்புடன் இல்லையென்றால் அவர்களின் கற்பும் அல்லவா கெடும். அவர்களின் கற்பு இழிவடையும் முறையில் நடந்து கொண்டு ஆண்கள் அவர்களிடம் கற்பை