பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எதிர்பார்ப்பது வீணே. ஆடவர்கள் நல்ல வர்களாக இருந்தால் அல்லவா பெண்களும் நல்லவர்களாக இருப்பர். கற்பைப் பொறுத்தவரையில் ஆண்களும் பெண்களும் நேர்விகிதத்தைப் போன்றவர்கள். ஆண்கள் கெட்டால் பெண்களும் கெடுவர் ஆண்கள் நல்லவர்களானால் பெண்களும் நல்லவர்களே. ஆண்களும் பெண்களும் வாழும் இடத்தைத் தானே நாடு என்கின்றோம். அங்கு ஆண்கள் நல்லவர்களானால் பெண்களும் நல்லவர்களாக இருப்பர் என்று சொல்வதும், அந்நாடே நலமுடன் இருக்கும் என்று சொல்வதும் ஒன்றுதான். இதனை உணர்ந்தே ஒளவையார், எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி கல்லை வாழிய நிலனே' என்றார். இதனை ஆழமாக வலியுறுத்தவே, பெண்களிடம் கற்பை எதிர்பார்க்கும் ஆண்கள் பெண்களையே கற்பழித்துத் திரியலாமா? பெண்களுக்கும் ஆண்களுக்கும் கற்புப் பொதுவன்றோ? -பாரதிதாசன், காதற் பாடல்கள், ப. 161. என்று கடுமையாகக் கூறுகின்றார். கற்பை மட்டும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைத்தால் போதும் என்று எண்ணவில்லை பாவேந்தர். ஆண்உயர் என்பதும் பெண் உயர் என்பதும் tணிலத்து எங்கணும் இல்லை நாணமும் அச்சமும் வேண்டும்-எனில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேண்டும் -பாரதிதாசன், இசையமுது, தொகுதி 1, ப. 52. என்கின்றார். இங்குத் திரு. வி. க. கூறுவதை ஒப்பிட்டுப் பார்த்தல் நலம். திரு. வி. க கூறுகின்றார்: ஆண் வடிவில் பெண்மைக்குணம் பெற்ற மக்களே இதுகாறும் உலகில்