பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் * 257 அன்பர்கள் என்றும், அடியார்கள் என்றும், அறிஞர்கள் என்றும், வீரர்கள் என்றும், பாவலர்கள் என்றும் போற்றப் படுகிறார்கள் ... ஆண் பிறவி தாங்கினோர் நல்வழியில் முயன்று பெண்மைக்குணம் பெற விழைவாராக, 8 ஆண் பெண் நிகர் என்பது கற்பில் மட்டுமல்லாது நாணத்திலும் அச்சத்திலும் வேண்டும். அகவாழ்வில் நாணமும் அச்சமும் வேண்டும் என்று முன்பு கூறினார். அதனால் தமிழரின் அகப்பண்பாட்டைச் சீர்குலைத்தலில் ஆணும் பெண்ணும் நாணப்படுதல் வேண்டும், அச்சப் படுதல் வேண்டும் என்பதனை ஊகித்துக்கொள்ள முடிகின்றது. அடுத்து, இல்லறத்தில் திருமண நிகழ்ச்சியில் ஆண் களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை இருத்தல் வேண்டும் என்று புரட்சிக் கருத்தை வெளியிடுகின்றார். திருமணத் தில், திருமணம் செய்து கொள்ளப்போகும் ஆண் பெண் இருவரின் மனநிலையையும் அறிதல் வேண்டும். ஆணின் விருப்பத்தைக் கேட்டுப் பெண்ணின் விருப்பத்தைக் கேளாமல் இருத்தல் கூடாது. இருவரையும் நிகராகவே கண்டு இருவரின் விருப்பத்தையும் கேட்க வேண்டும் என்பதனை நகைமுத்து வேடப்பன் திருமண நிகழ்ச்சியில் காட்டுகின்றார். திருமண நிகழ்ச்சியின்போது, பெரியவர் ஒருவர், பெண்ணே நகைமுத்து! வேடப்பனை நீ விரும்பிய துண்டோ? வாழ்வின் துணையெனச் சூழ்ந்த துண்டோ? என்றலும், நகைமுத்து எழுந்து வணங்கி, வேடப்பனை நான் விரும்பிய துண்டு வாழ்வின் துணை என்று சூழ்ந்தேன்' என்றாள். "வேடப்பா நீ மின் நகைமுத்தை மணக்கவோ நினைத்தாய்? வாழ்க்கைத் துணையென அணுக எண்ணமோ அறிவித்திடுவாய்'