பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் இதைத் தொடர்ந்து எதிர்பாராத முத்தம், தமிழச்சி யின் கத்தி, இசையமுது, பாண்டியன் பரிசு, காதலா? கடமையா? அழகின் சிரிப்பு முதலான கவிதை நூல்கள் வெளிவந்தன. பாவேந்தரின் நூல்களைப் பல பதிப்பகங் கள் வெளியிட்டுள்ளன. செக் நாட்டு அறிஞர் பேராசிரியர் கமில் சுலபில் செக் மொழியில் பாவேந்தரின் பாடல்களை 1961-ல் மொழி' பெயர்த்தார். பாவேந்தர் வரலாற்று அடிப்படையில் தம் கற்பனைத் திறம் கொண்டு எழுதியுள்ள பிசிராந்தையார்' என்னும் நாடகம் 196 ஆம் ஆண்டுக்கான தில்லி சாகித்திய அகாடமியின் பரிசைப் பெற்றது. பாவேந்தரின் மறைவும் நினைவும் வாழ்நாள் முழுவதும் உணர்ச்சிப் பிழம்பாய் எரிமலை யாய்ப் புரட்சிக் கருத்துகளை єu птifl இறைத்த பாவேந்தருக்கு உடல்நலம் குன்றியதால் 19.4.64-ல் சென்னை அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 21.4.1964 அன்று அவர் இவ்வுலக வாழ்வை நீத்தார். 22.4-1904-ல் புதுவைக் கடற்கரையில் அடக்கம் செய்யப் பட்டார். 1965 ஏப்பிரல் 21 அன்று புதுவைக் கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசனின் நினைவு. மண்டபம் புதுவை நகராட்சியினரால் எடுக்கப்பட்டது. இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது (2-1.1967) சென்னைக் கடற்கரையில் புரட்சிக் கவிஞரின் முழு உருவச் சிலையை முதலமைச்சர் அண்ணா தமிழக அரசின் சார்பில் நிறுவினார்; சிலையை டாக்டர் மு. வ. திறந்து வைத்தார். 1971 ஏப்பிரல் 29 அன்று புதுவை அரசால் பாவேந்தர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பாவேந்தர்