பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்னலும் வேடன் எழுந்து வணங்கி மின்நகை துணையாய்ச் சூழ்ந்தேன்' என்றான் -பாரதிதாசன், குடும்பவிளக்கு, பகுதி 3, ப. 43. என்று இருவரின் விருப்பத்தையும் கேட்டறிந்த பின்பே மணவினையை நடத்துகின்றனர். இதில் பெரியவர் பெண்ணிடம் தான் முதலில் கேட்பதாக அமைக்கின்றார் பாவேந்தர். அவர் புரட்சிக்கவி அல்லவா! அடுத்து, பெண் பார்க்கும் இடத்தில் ஒரு நிகழ்ச்சி. திருமணத்திற்கு நகை முத்திடமும், வேடப்பனிடமும் விருப்பம் கேட்கும் முன்னர் தாத்தா பெற்றவரின் விருப்பத்தை முறையாகக் கேட்கின்றார். அதற்கு அவர்கள் தரும் விடை, மகிழ்ச்சியுடன் ஒப்புவதாய் மாவரசன் தானுரைத்தான் புகழ்ச்சியுறும் வேடப்பன் பூவை மணத்தை இகழ்ச்சியா செய்திடுவேன்? என்றாள் மனைவி - நகைப்போடு நன்றென்று உரைத்தான் மணவழகே! மானே, மயிலே மருமகளே என்வீட்டு வான நிலாவே மகிழ்வென்றாள் தங்கமுமே! -பாரதிதாசன, குடும்பவிளக்கு, பகுதி 3, பக். 31.2. என்று தாய் தந்தை இருவரின் விருப்பத்தையும் கூறும் களமாக அக்காட்சியினை அமைக்கின்றார் பாவேந்தர். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஆண் பெண் நிகராக வாழ்தலையே பாவேந்தர் விரும்புகின்றார்.