பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப் பிரமணியன் 259 6. காதல் மணம் பாவேந்தர், காதல்-உயிர் இயற்கை என்று கூறு கின்றார் என்பதனை முன்பு கண்டோம். இல்லறம் நடத்தப் போகும் ஆண்பெண் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தல் வேண்டும். காதலித்துத் திருமணம் செய்து கொள்வது தமிழ்ப்பண்பாடு. பன்னெடுங் காலத்திற்கு முன்பே போற்றி வளர்க்கப்பட்ட பண்பாடு. இப்பண்பாடு இடைக்காலத்தில் வீழ்ச்சி அடைந்தது. இதனால் இல்ல றத்தில் இன்பம் நீங்கத் துன்ப இருள் சூழ்ந்தது. இல்லத்தில் துனபம் சூழ்ந்ததால் புறவாழ்வில் இன்பம் ஏது? மனிதனின் வாழ்க்கையை 360 பாகம் (டிகிரி) கொண்ட ஒரு வட்டமாக அமைப்போமானால் அதில் 60 பாகம் அகவாழ்வு, 300 பாகம் புறவாழ்வு. இதில் வேடிக்கை என்ன என்றால் 60 பாகம் சரியாக இருந்தால்தான் மற்ற 300 பாகங்கள் ஒழுங்காக இருக்கும். அதாவது அகவாழ்வு செம்மையுடன் இருந்தால்தான் புறவாழ்வு சீர்மை பெற்று விளங்கும். அகவாழ்வு காதலை மையமிட்டது காதல் இல்லாதது உண்மையான அகமாகாது. எனவே அகத்தைப் போற்றி இல்லறம் நடத்தும் ஆண் பெண் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தல் வேண்டும். பெற்றோர் காட்டும் ஒருவனுக்குக் கழுத்தை நீட்டாமல் தான் காதலித்த ஒருவனையே ஏற்று வாழ்தல் வேண்டும். ஊரில் உள்ள பெண்களெல்லாம் உள்ளத்தைப் பூர்த்தி செய்யும் சீரியர்க்கு மாலையிட்டுச் சீரடைந்து வாழ்கின்றார். -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி l, W. F. 3. வாழ்க்கை சீரடைய உள்ளத்தை நிறைவு செய்யும் சீரியருக்கு மாலை இடுதல் வேண்டும் என்று கூறும் பாவேந்தரின் ஒவ்வொரு சொல்லும் எத்தகைய உயர்ந்த கருத்துகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது!