பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் இவ்வாறு அமைந்த இல்லறம் ஆண்களுக்கு எத்தகைய ஆற்றலைப் புறவாழ்வில் தருகின்றது. இ த ைன ப் பாவேந்தர், கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம் -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 4. என்று உவகையோடு கூறுகின்றார். ஒருவனும் ஒருத்தியும் மனம் ஒத்து இணைந்து விட்டதைத் தவறு என்று கூறுதல் காதலை அழிப்ப தன்றோ? காதலை அழிப்பதென்பது கூற்றுவனைக் கைகாட்டி அழைப்பதல்லவா? அப்பிழையைச் செய்யாதீர், காதலிப்பது பிழையன்று. ஒருவனும் ஒருத்தியுமாய்-மனம் உவந்திடில் பிழையென உரைப்ப துண்டோ? -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 29. இல்லை என்கின்றார் பாவேந்தர். ‘காதல் ஒருவனுக்கும், ஒருத்திக்கும் இடையில் மட்டுமே தோன்றும். ஒருவன் பல பெண்களைக் காதலிக்க முடியாது. அதுபோலவே ஒருத்தி பல ஆண்களைக் காதலிக்க முடியாது. இது தமிழர்களின் அகப்பண்பாட்டுக் கொள்கைகளுள் ஒன்று. இதனை நாகரிகமாகப் போற்றி ஒழுகினர். இதனை, ஒருத்தி ஒருத்தனை மணத்தல் எங்கள் நாகரிகம்! ஒருத்தன் ஒருத்தியை மணத்தல் எங்கள் நாகரிகம்! என்று கூறி மகிழ்கின்றார். இவ்வாறு அமைந்த வாழ்வில்தான் ஒருவரை ஒருவர் போற்றி வாழமுடியும். ஒரு பெண்ணுக்குக் கணவனைவிட உயர்ந்த ஒரு பொருள் இருக்க முடியாது. கணவனுக்குச் சமமான ஒருபொருள் இருக்கக்கூடாது என்பர். இது ஆணுக்கும் பொருந்தும். இந்நிலை இவர் இடத்தில் ஏற்படக் காதல் மணம்