பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் - 25 வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு 95ஆம் எண் இல்லத் தைப் புதுவை அரசு வாங்கிப் புரட்சிக் கவிஞர் நினைவு நூலகமும் காட்சிக் கூடமும் நடைபெற வழி செய்தது. ஒவ்வோராண்டும் புதுவை அரசு பாவேந்தர் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடி வருகிறது. 1972 ஏப்பிரல் 29 அன்று பாவேந்தரின் முழு உருவச் சிலையைப் புதுவை அரசு திறந்து வைத்தது. பாவேந்தரின் அடிச்சுவட்டில் பண்டிதர்களிடமும் மடங்களிடமும் அடிமைப் பட்டிருந்த தமிழைப் பாமரர்களிடையே கொண்டு வந்தார் பாரதியார். அவரது அடியொற்றித் தோன்றிய பாவேந்தர் சமூக அவலங்களைப் பாடித் தமிழுலகிற்குப் புதிய துறைகளைக் கண்டார். பட்டுக்கோட்டைக் கலியாண சுந்தரம், கண்ணதாசன், கம்பதாசன் ஆகியோர் திரைப் படத்துறையில் பாவேந்தரின் அடிச்சுவட்டைப் பின் பற்றினர்.

பாரதியார் இன்று நமக்கு வைத்து விட்டுப் போன சொத்துக்கள் பல. அவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கனகசுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் என்று சொல்ல வேண்டும்' என்று வானொலியில் விமரிசனம் செய்தார் புதுமைப்பித்தன்.

பாவேந்தரின் பாட்டுத் தாக்கத்தால் உருப்பெற்று வளர்ந்தவர்களெனக் கவிஞர்கள் கண்ணதாசன், சுரதா, முடியரசன், வாணிதாசன், முருகுசுந்தரம், பட்டுக் கோட்டையார் போன்றவர்களைச் சுட்டலாம். 15.9.1961-ல் சென்னையில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கட்சியின் முதல் மாநாட்டில் பாவேந்தரின் தலைமையில் பாடிய கவியரங்கில் கவிஞர் கண்ணதாசன், шт—2