பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 புரட்சிக்க விஞர் பாவேந்தர் பாரதிதாசன் உழைத்து உழைத்துச் சலித்த அவனின் வாயிலிருந்து வெளிப்படும் இப்பாடல் ஆண்டை அடிமையின் வாழ்வை எவ்வாறு சித்திரிக்கின்றது. இக்கொடுமையை எண்ணி எண் ணிப் பாவேந்தர், உழைப்பவர் என்றே ஓரினம் உண்டோ பழிப்பிலாது உலகின் பயனை நுகரும் ஓரினம் உண்டோ பிறவியில் -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 28. என்ற கேள்வியை எழுப்புகின்றார். அடுத்துத் தனியுடை மையால் உண்டாகும் கொடுமையினைக் கூறுகின்றார். தனியுடைமை அரசின் நேரடிப் பராமரிப்பில் இருக்கும் சொத்து மதிப்பை விடத் தனியாரிடத்தில் இருக்கும் சொத்து மதிப்பு அதிகமாகிவிட்டால் அவ்வரசினால் முழுமையாகச் செயல்பட முடியாது. தனியாரிடத்தில் இருக்கும் சொத்து மதிப்புக் குறையக் குறையத்தான் *அரசு' என்ற இயந்திரம் பழுதில்லாமல் இயங்கும். அரசு பழுதுபட்டால் நல்லவர்கள் தீமையையும், தீயர் நன்மையையும் அடைவர். இந்நிலை மாறி நல்லவர்களுக்கு நன்மையும் தீயவர்க்குத் தீமையும் என்ற முறையில் அரசு செயல்பட வேண்டு மானால் சொத்துக்கள் எல்லாம் அரசி டைமையாக வேண்டும். தொழில்களை எல்லாம் அ ர .ே ச ஏற்று நடத்துதல் வேண்டும். வணிகத் தொழில் பொருள் ஈட்டச் சிறந்ததொரு துறையாகும். இதில் முறைகேடு களைச் செய்து வணிகர்கள் பொருள் ஈட்டத் தொடங்கி விட்டனர். இதனைக் கண்டு வெகுண்ட பாவேந்தர், தனியாரிடத்தில் வாணிகம் இருந்தால் சரிவிலைக்குச் சரக்கு அகப்படுமோ? இனியும் அரசினர் கண்மூடி இருந்தால் ஏழை மக்களை மண்ணிற் புதைத்தலே S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S