பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தாம் பாவேந்தரைப் பின்பற்றிக் கவிதை எழுதியவர் என்பதை ஒரு பாடலால் குறிப்பிடுகின்றார்: ஏடெடுத்துக் கவியெழுத நினைக்கும் போதில் என்னெதிரே நின்னுருவம் ஏறு போன்று; பாடுதமிழ்' என்றுரைக்கக் கேட்பேன்! அந்தப் பக்தியிலே பண்ணுாறு கவிதை யாப்பேன் கூடலிறைப் பாண்டியன் போல் கிமிர்ந்து கிற்கும் குலத்தலைவா! யான்பெற்ற கல்வி கொஞ்சம் நாடெனையும் நோக்கும் வகைங்ாள் வளர்ந்தேன் யாவுமுனைக் கற்றதனால் பெற்றபேறு. இப்பொழுது புதுக்கவிதை எழுதுகின்றவர்களுக்குச் சமூகப் பாடுபொருள்களை அமைத்துக் கொடுத்தவர் பாவேந்தரே என்பது நினைவு கூரத்தக்கது. பாரதிதாசன் பல்கலைக் கழகம் தகுந்த குடும்பம் சர்வகலாசாலை' என்ற தலைப்பில் பாவேந்தர் அவர்கள் 1936-ல் ஒரு கவிதை இயற்றியுள்ளார். இப் பாடலின் பரிணாமமே குடும்பவிளக்கு’ என்பர் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன். தமிழியக்கப் பல்கலைக்கழகமாக விளங்கிய பாவேந்தர் அவர்களின் நினைவாக ஒரு பல்கலைக்கழகம் நிறுவத் தமிழக அரசு நினைத்தது. அதன்படி திருச்சியில் அமைக்கப் பட்டுள்ள பல்கலைக்கழகத்திற்குப் பாரதிதாசன் பல்கலைக் கழகம் என்று பெயர் சூட்டியுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களால் 30.4.1982-ல் தொடங்கப்பட்ட பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு மாண்புமிகு நிதியமைச்சர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.