பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் - 279 ஏழைகள் அனைவரும் கூழைக் குடிக்க வாழை இலையில் வார்த்த நெய் ஓடையில் மிதக்கும் பல்கறிச்சோறு விழுங்கும் -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 84. மற்றவர்கள் எத்தனை நாளைக்குத்தான் அதே நிலையில் இருப்பர். தொழிலாளர்களின் - ஏழைகளின் இவ் ஏழ்மை நிலை நீங்கி இன்ப வாழ்வு அவர்களுக்குக் கிட்ட வேண்டுமானால் தொழிலாளர்கள் புரட்சி செய்தல் வேண்டும். புரட்சியால் மட்டுமே புரையோடியுள்ள இந் நிலை மாறமுடியும். அதற்குத் தொழிலாளர்கள் ஒன்று படுதல் வேண்டும், ஒற்றுமையே வெற்றிக்கு வழி. தொழிலாளர் ஒற்றுமை ஒற்றுமை வெற்றிக்கு வேர். தொழிலாளர் ஒன்றுபட ஒர் இயக்கம் வேண்டும். சங்கம் வேண்டும். சங்கம் வைத்துக் கொண்டால்தான் சங்கம்' என்ற பெயரால் தொழிலாளர் ஒன்றுபடுதல் முடியும். ஒற்றுமை, சங்கம், வெற்றி மூன்றும் ஒன்றை ஒன்று பிரிந்து செயல்பட முடியாதன. சிங்கங்கள் போல் - இளஞ் சிங்கங்கள் போல் - பலம் சேர்ந்திடும் ஒற்றுமை சார்ந்திடலாலே சங்கங்களால் - நல்ல சங்கங்களால் - மக்கள் சாதிக்கக் கூடும் பெறாப் பெருங்காரியம் -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 2, ப. 114. என்றும், ஒற்றைக் கை தட்டினால் ஓசை பெருகிடுமோ? மற்றும் பலரால் வளம் பெறோமோ தோழர்களே -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 135. என்றும் கூறுகின்றார் பாவேந்தர்.