பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மான இயக்கம் (சுயமரியாதை இயக்கம்) மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்பதே தன்மான இயக்கத்தின் உயிர்நாடி. அதாவது, பிறந்த சாதி அடிப்படையிலோ அல்லது செய்யும் தொழில் அடிப்படையிலோ மனிதனைப் பாகுபடுத்தி இவன் உயர்ந்தவன் இவன் தாழ்ந்தவன் என்று பேசுதலோ, செயல் படுத்தலோ கூடாது. இவ்வடிப்படையிலேயே பாவேந்தரின் தன்மான இயக்கம் இயங்குகின்றது. பாவேந்தரின் இவ் வியக்கத்தில் மூன்று முக்கியக் கூறுகள் வேரென மிளிர் கின்றன. ஒன்று, சாதி மத மறுப்பு, பிறிதொன்று கடவுள் மறுப்பு, மற்றது மானுடத்தைப் போற்றல். இப்பகுப்பின் வழி அன்னாரது இவ்வியக்கத்தை விரிவாகக் காண்போம். சாதி மதங்களின் தோற்றமும் வளர்ச்சியும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதன் தனித்தனி யாக வாழ்ந்து கொண்டிருந்தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர். இந்நிலையில் அவன் வாழ்க்கை இயற்கையை எதிர்த்துப் போராடுவதாகவே இருந்தது. விலங்குகள், தீ, புயல், அடைமழை போன்ற இயற்கையின் சீற்றத்தை எதிர்த்துப் போராடியே வாழ்ந்து வந்தான். இப்போராட்டத்தின் முடிவில் அவன் தோல்வி காணும் போது அவற்றை அச்சத்தின் காரணமாக வணங்கத் தலைப்