பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 27 அறிஞர் பாராட்டுரைகள் மறைமலையடிகள்

  • இக்காலத்திற் ԼI GՆ) துறைகளிலுஞ் சீர்திருத்தம் வேண்டி நிற்கும் நம் தமிழ் மக்கட்குப் புதுமுறையிற் பாடப் பட்டிருக்கும் பாரதிதாசனின் பாட்டுகள் கிளர்ச்சியினையும்

மகிழ்ச்சியினையும் பயந்து, சீர்திருத்தங்கள் பலவற்றிற்கு வழி காட்டும்'. ' பெரியார்

  • மனித சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் இன்றிய மையாத புரட்சியான பல சீர்திருத்தங்களை ஆதரிப்பது மட்டுமன்றி, அவைகளை ஜனசமூகத்தில் பல வழிகளிலும்

பரப்ப வேண்டுமென்ற ஆசையைக் கொண்டவர். சிறப்பாகவும் சுருக்கமாகவும் கூற வேண்டுமானால் பாரதிதாசன் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி' என்றுதான் கூற வேண்டும் . ! திரு. வி. க. கடவுள் பாட்டு, கருணைப் பாட்டு, வெண்மதிப் பாட்டு, ஞாயிறு பாட்டு, திங்கள் பாட்டு, நானிலப் பாட்டு, எல்லாம் பாட்டு - பாட்டே! எல்லாவற்றையும் பாட்டாக நோக்கும் நெஞ்சில் பாட்டு முகிழ்க்கும். அதனை எழுத்தோவியமாக அமைக்கும் பேறு பலர்க்கு வாய்ப்பதில்லை. தோழர் பாரதிதாசனுக்கு அப்பேறு எளிதில் வாய்த்தது. இது கருவில் பெற்ற திருவேயாகும். புதுவைத் தமிழ் வைப்பு கனகசுப்புவினிடத்திருந்து பொங்கி வழிந்த பாமணிகள் பலப்பல. அவற்றுள் கருத்து வேற்றுமை உண்டு. வேற்றுமை என் நெஞ்சைக் கவர்வ தில்லை; பாட்டே என் நெஞ்சைக் கவரும். இது சுப்புவின் பாட்டுத்திறம் என்று கூறாது வேறென்ன கூறுவது.'