பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கவிமணி கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தமிழ் நாட்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவர்; காலஞ்சென்ற பாரதியாரின் பிரதம சீடராவர்; பாரதியாரின் பாடல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தில் சுதந்திர உணர்ச்சியை உண்டு பண்ணினது போல ,பாரதிதாசனுடைய பாடல்கள் சமூகச் சீர்திருத்த உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டி வருகின்றன என்றால் மிகையாகாது. இனிய எளிய நடையிலுள்ள இவரது பாக்கள் படிப்போருக்கு இன்பம் பயக்கும் என்பதில் யாதும் ஐயமில்லை. மதங்களிலும் பழைய ஆசாரங்களிலும் ஊறிக்கிடந்த மக்களிடையே இவருடைய பாடல்கள் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கின்றன. ஆதலால் இவர் ஒரு புரட்சிக்கவி, அமெரிக்கப் புரட்சிக் கவிஞர் வால்ட் விட்மன்: தமிழ்நாட்டுப் புரட்சிக்கவி பாரதிதாசன் இக்கவிஞரைப் பல துறைக்கும் பாராட்ட வேண்டியது தமிழ் மக்களின் முதற்கடமையாகும்'. ' கி. ஆ. பெ. விசுவநாதன் 'கதைக்காக ஒருமுறை, கவிதைக்காக ஒருமுறை, கருத்திற்காக ஒருமுறை, கொள்கைக்காக ஒருமுறை, உணர்ச்சிக்காக ஒருமுறை, இனிமைக்காக ஒருமுறை, எழிலுக்காக ஒருமுறை படித்தேன். ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு கவிதையும் ஒரு படித்தேனாகவே இனித்தது.' சபாரதிதாசனின் தோற்றமே தமிழனின் தோற்றம். அவரது வீரம் தமிழனின் வீரம். அவரது உடம்பில் Ձւգւա இரத்தமும் தமிழ் இரத்தம். அவரது உணர்ச்சி தமிழுணர்ச்சி.' பு:அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞர் பாரதிதாசன்' என்று புதுமைப் பித்தனும், பாரதிதாசன் தமிழ்ப் பற்றுக்கு எல்லையில்லை. அவர்தம் பாடல்களைப் படிக்கின்ற அந்நியனும் தமிழனாகி: