பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 29 விடுவான் என்று டாக்டர் சிதம்பரநாத செட்டியாரும், பாரதிதாசனாருடன் பழகுவதன் மூலம் பாரதியைப் பார்க்கவில்லையே? அவருடன் பழகவில்லையே? என்ற குறை எனக்கு நிவர்த்தியிற்று' என்று கல்கியும், :பாரதிதாசன் கவிதையில்வேகம் உண்டு; விடுதலைத் தாகம் உண்டு, பண்பும் உண்டு, பயனும் உண்டு' என்று திரு. ரா. பி. சேதுப் பிள்ளையும், பாரதியார் சொல்லும் விரத் தமிழ்ச் சொல் இன்பத்தைப் பாரதிதாசனின் பாடல் களில் காணலாம். என்று பரலி சு. நெல்லையப்பரும், விடுதலை எல்லாம் கிளர்ச்சியால் வெல்லும் விடுதலை வேட்கைவெறி கொண்ட வீரன்' என்று நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளையும், ஆவேசத் தையும் உணர்ச்சியையும் வெள்ளமாகக் கொட்டும் உயிர்க் கவி பாரதிதாசன் என்று வ. ரா. வும், "பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு உண்மையான கவி இருக்கிறார் என்று கு.ப.ரா. வும், உலகெங்கும் உள்ள நவயுகக் கவிஞர்களிலே பாரதிதாசனும் ஒருவர் என்று தி. ஜ ர. வும் குறிப்பதாகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடுவர்." பேரறிஞர் அண்ணா முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் ஒரு முழுமதி போலத் தமிழ்நாட்டில் தோழர் பாரதிதாசன் கவிதை தோன்றியுள்ளது. பு ர ட் சி க் கருத்துக்கள் அவரது உள்ளத்தில் பொங்கிப் பூரித்துப் புதுமைக் கவிகளாக வெளி வருகின்றன. இயற்கையின் எழில், கலை துணுக்கம் முதலியவை பற்றி அவர் இயற்றியுள்ள கவிதைகள் படிப்போரைக் களிப்புக் கடலில் ஆழ்த்தும்.'" டாக்டர் மு. வ.

  • புரட்சிக் கவிஞர் என்றாலே இந்த நூற்றாண்டிலும் இதற்கு முந்தைய நூற்றாண்டிலும் வேறு யாரையும்