பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களை மூன்று) நிலைகளில் நின்று இனிக் காண்போம்: I பாரதிதாசன் பாடல்களில் இயற்கை கலைகள் அறுபத்து நான்கனுள் உணர்ச்சிக்கு மொழி வடிவம் கொடுக்கும் கலை இலக்கியக்கலை. இலக்கியமே உணர்ச்சியின் வெளிப்பாடுதான். கவிஞன் உணர்ச்சிப் பிண்டமாக இருப்பவன். அறிவின் துணையை மட்டுமே கொண்டு கவிதையை ஆயத் தொடங்கினால், அங்கே க வி ைத தோன்றுவதில்லை. உணர்ச்சியில் மூழ்கி, அனுபவித்து, அந்த அனுபவத்தைப் பிறருக்கு வழங்க வேண்டுமென்ற கருத்துடன் உணர்ச்சிப் பெருக்குடையோன் தன் உணர்ச்சிக்குச் சொல்லின் மூலம் கொடுக்கும் வடிவமே கவிதை எனப்படும். எனவே, கவிதை என்பதே கவிஞருடைய உணர்ச்சியைச் சொற்களின் மூலம் நமக்குத் தருகின்ற ஒரு கருவி என்பது பெறப்படும். உணர்ச்சியில் பிறந்து, உணர்ச்சியில் வளர்ந்து, உணர்ச்சி வடிவாகவே வெளிவரும் கவிதை, கற்போர் மனத்தில் உணர்ச்சியை யூட்டும் என்பதில் ஐயமில்லை. ஒரு கவிதை எவ்வளவு துாரம் கற்பவர் மனத்தில் உணர்ச்சியை ஊட்டும் என்பதற்கு அக்கவிஞனுடைய உணர்ச்சியின் ஆழமும் அந்த உணர்ச்சி ஆழத்தை வெளியிட அவன் பயன்படுத்தும் சொல் ஆற்றலுமே சிறப்பான காரணங்கள் ஆகும். சாதாரண நிகழ்ச்சிகளைக் கூடக் கவிஞன் காண்கிற முறையே வேறு. நம் போன்றவர்கள் ஒரு நிகழ்ச்சியில் எவ்வளவு ஈடுபட்டாலும், "நாம் என்ற முனைப்பையும் ஈடுபடுகிறோம் என்ற நினைப்பையும் மறப்பதில்லை. ஆனால், கவிஞன் ஈடுபடும்போது அவன் தன்னை மறந்து உணர்ச்சியில் ஈடுபட்டுத் தான் வேறு,