பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அது வேறாக நில்லாமல், தானே அதுவாய் ஓர் அத்துவித நிலையையடைகிறான். பின்னர் அதிலிருந்து வெளிப்பட்டு அந்த அனுபவத்தை மறுபடியும் சிந்தித்துப் பார்த்துச் சொற்களின் உதவிகொண்டு அனுபவத்தை வடிக்கத் தொடங்குகிறான். அங்ங்ணம் தொடங்கும்பொழுது இதுவரை அடங்கி யிருந்த அறிவாற்றலின் துணையும் தேவைப்படுகிறது. இவ்வறிவாற்றலின் துணைகொண்டு அவ்வுணர்ச்சியை ஒரளவுக்குக் கட்டுப்படுத்தித் தேவையான அளவு வெளியிடு: கிறான். ஒரு சில கவிஞர்கள் குடத்தில் உள்ள நீரைக் குழாய்மூலம் வெளிப்படுத்துவது போலத் தம் உணர்ச்சியை ஒரளவு கட்டுப்படுத்தி வெளியிடுகின்றனர். இன்னும் சிலர் குடத்து நீரை அப்படியே கவிழ்ப்பது போலக் காட்ட முற்படுகின்றனர். இரண்டுமே நீரை வெளிப்படுத்துகின்ற இயல்பைப் பெற்றிருப்பினும், குழாய் மூலம் வெளியிடுவது போல் அப்படியே கவிழ்ப்பது விரும்பிய LJ ILIGOE) @TIT” யளிப்பதில்லை. இந்த அடிப்படையை மனத்தில் கொண்டு பாரதி, பாரதிதாசன் என்ற இருவருடைய கவிதைகளையும் ஆர அமர நினைந்து பார்ப்போமேயானால், இருவருடைய உணர்ச்சிக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதை அறிய முடியும். இருவருடைய ஆற்றலும் பேராற்றல் என்பதில் ஐயமில்லை. பலவிடங்களில் வாழும் மக்களிடம் பழகிய காரணத்தால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் குழாய் மூலம் நீர் சொரிவது போலப் பாரதியின் கவிதைகள் வெளிப்பட்டன. புரட்சிக் கவிஞரின் பாடல்கள் குடத்தைக் கவிழ்த்து நீரைச் சொரிவது போல உணர்ச்சியை அப்படியே கொட்டிவிடுகின்றன. இங்ங்ணம் வெளியிடுவது பாரதிதாசனுடைய தனிச் சிறப்பாகும். உணவுப் பண்டங் களுள் இருவேறு சுவையுடைய பொருள்கள் இருப்பதனால் ஒன்றைவிட ஒன்று உயர்வு என்றோ தாழ்வு என்றோ