பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 35. யாரும் கருதத் தேவையில்லை. அந்தந்தச் சுவை அந்தந்தப் பண்டத்திற்குத் தனிச் சிறப்பை நல்குகிறது. அதேபோல் உணர்ச்சியை அப்படியே கொட்டி நம்மையும் அதில் மூழ்கடித்துத் திளைக்குமாறு செய்தது புரட்சிக் கவிஞரின் தனிச் சிறப்பாகும். . இவ்வாறு உணர்ச்சிப் பிழம்பாக உள்ள பாரதிதாசன் தம் நூல்களில் இயற்கையைப் பற்றிப் பாடியுள்ள நிலை யைப் பார்ப்போம். இயற்கை இயற்கைக்கு அறிமுகம் தேவையில்லை. அதன் நியதிப்படி பிறந்து, அதன் மடியிலே வளர்ந்து, இறுதியில் அதனோடு கலக்கும் நாம்தான், நம் பிறப்பால் இயற்கைக்கு நம்மை அறிமுகம் செய்து கொள்கிறோம். நமக்கும் இயற்கைக்கும் இடையேயுள்ள நீங்கா நட்பில் ஒருவரை யொருவர் புரிந்துகொள்ள நாம் செய்யும் முயற்சியைத் தான் வாழ்க்கை என்கின்றோம். அறிவும் உணர்ச்சியும் இணைந்த மனித வாழ்வில் இயற்கையை அறிந்து சொன்னவன் அறிஞன்; உணர்ந்து சொன்னவன் கவிஞன். இந்தப் பூக்கொய் படலத்தில் பறித்த மலர்களைத் தொடுத்து வைத்த நாராகக் காலம் இழைகிறது. காலம் செல்லச் செல்ல வளர்ந்த இம்மாலை, சிதறுண்டு கிடந்த, இயற்கைக்கு ஒரு தெளிவான வடிவம் தந்து செல்கிறது. இதன்மூலம் ஒவ்வொரு கால நிலையிலும் இயற்கை, மனிதனுக்குப் புதிராய், இறையாய்த் தாயாய்த், தோழ. னாய்ப் பல தோற்றங்கள் காட்டியிருப்பதை அறிய முடிகிறது. அறிவியல் வளர்ச்சியால் அடிமை நிலைக்கும். இயற்கை கொண்டு வரப்பட்டிருக்கிறது. மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மிகவும் வியக்கத். தக்க, இணையற்ற பொருள் மொழிதான் என்பர். கலைகளின் அரசியாகிய கவிதையின் அரியாசனம் அது