பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தான். காதலில் இயற்கையோடு இரண்டறக் கலந்து போகாத கவிஞன் இல்லை. காலத்தின் ஒட்டத்தில் அறிவியல் மதிப்பீடுகள் மாற்றம் கொள்வதைப் போலவே கலையிலும் மதிப்பீடுகள் மாற்றங்களை ஏற்கின்றன. ஆகவே கவிஞர்களின் பார்வையிலும் இயற்கை பற்றிய கொள்கைகள் இம்மாற்றங்களை ஏற்கத் தவறவில்லை.

  • செய் கை" என்பது செய்கை என்றாதல் போல இயல் கை' - இயற்கை ஆயிற்றெனலாம். இயல் - இயலுதல் (கை - தொழிற்பெயர் விகுதி).

சங்க காலத்திலோ காவிய காலத்திலோ இச்சொல் இன்று நாம் கொள்ளும் பொருள் குறித்ததாக இல்லை. சங்கப்பாடல்களில் இயல்பு என்ற பொருளிலேயே இச்சொல் வழங்குகின்றது. முன்பு நுண்பொருளுணர்த்திய இச் சொல் இப்போது பருப்பொருட்பேறு பெற்று (Concretion) "இயற்கை யென்ற பொருளில் வழங்குகிறது. தொல் காப்பியம் கூறும் முதல், கருப்பொருட்களை இன்று நாம் இயற்கையுள் அடக்கலாம். தொல்காப்பிய உரையில் சேனாவரையர் இயற்கைப் பொருள் என்பதற்குத் தன்னியல்பிற் றிரியாது நின்ற பொருள்' என்று பொருள் கூறித தன்னியல் பில் திரியாதன நிலம், நீர், தீ, வளி என்பவற்றைக் காட்டுகிறார். இயற்கை பற்றிய கல்வி மனிதனோடு இயைந்த தொன்மையுடையது ஆகும். அறிஞர் பிளாட்டோ நிலம், நீர், நெருப்பு, காற்று எனும் நான்கின் இயல்பில் இயற்கை யைக் கண்டார். காட்வெல் மனிதன், மனிதனைச் சூழ்ந்துள்ள இயற்கைப் படைப்பு, மனிதனுக்கும் இயற்கைச் சூழலுக்கு முள்ள உறவு' என மூன்று பகுதிகளாக இயற்கையை உணர்கிறார்.