பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 37. பொருட்களிலும் உயிர்களிலும் பொலியும் எழிலை விரும்பிப் போற்றும் மக்கள் அவை அனைத்திலும் அழகிற். சிறந்தவர். அவரே அழகமரும் மாண்புமிக்க கோவில் களாவர் என்றார் மில்டன். ஆயினும் மக்களை இயற்கைப் பொருளாகச் சிலர் ஏற்பதில்லை. இக்கருத்துகளை யெல்லாம் மறுத்து ஒயிட் பீல்டு நம் காட்சி அறிவிற்குத், தென்படுவதே இயற்கை என வரையறுத்தார். தனிநாயக அடிகள் இதனை மேலும் புலன்களால் அறியக்கூடியது இயற்கை; அது மனிதனோ அல்லது அவன் படைப்போ அன்று' என்றார். மனிதனை இயற்கையாகக் கொள்ளாத நிலையையே பல அறிஞர்களின் கூற்றும் தெளிவுறுத்துகின்றன. ஒரு பக்கம் இயற்கையும், இயற்கை நிகழ்வும், மற்றொரு பக்கம் மனிதனும், மனித இயக்கமும் அமைந்து ஒற்றுமையுடையனவனாகத் தோன்றுகின்றன. ஆயினும் இயற்கை மனிதனினின்றும் வேறுபட்டது. மைனிதனின் தோற்றம் இயற்கை. உலக உயிர்களை ஊட்டி வளர்ப்பதும் இயற்கை. மனிதனின் உள்ளத்தைச் செப்பனிடுவதும் இயற்கை என்ற பொதுவான கருத்தும் நிலவி வருகின்றது. கிரேக்கர்கள் இயற்கையின் ஒவ்வொரு கூறும் ஒவ்வொரு கடவுள் எனக் கண்டு வழிபட்டனர். இவ்வாறு இயற்கையை வெறும் இயற்கையாகக் கருதாமல் அதனைப் பெரும் ஆற்றல் படைத்ததாகக் கருதுவது ஒரு கொள்கை. அவ்வியற்கையைத் தெய்விக வடிவாகக் கருதுதல் வேறொரு கொள்கை. இயற்கையை இறைவனின் முகமாகக் கண்டார் சால்ஸ் கிங்ஸ்லி. இயற்கையை இறைவனின் கலை' என்றார் சர்தாமஸ் பிரெளன். இறைவனின் பிரதிபலிப்பே இயற்கை. என்றும், இயற்கை வாழக் கூடியது, அது இறைவனின்.