பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ஆடை போன்றதென்றும் அறிஞர் குறிப்பிடுகின்றனர். மேலும் மனிதனை நல்வழிப்படுத்தும் நூலாகவும் போதகனாகவும் ஆசிரியனாகவும் இயற்கையைக் கண்டனர். பாரதியார் பராசக்தியின் தோற்றமாக இயற்கை அழகினைக் கொள்கிறார். இயற்கையை இறையோடு ஒத்துக் காணும் நோக்கிற்கு எதிரானவர் பாரதிதாசன்.? உலகின் புறத்தோற்றம் காட்டும் காட்சி அழகை இயற்கை யாகக் கண்டு அதனை முருகனோடு இணைத்துக் காண்கிறார் திரு. வி. க. இயற்கையின் ஒவ்வொரு காட்சியும் மனிதனின் ஐயங்களையும் கவலைகளையும் போக்கி அவன் உள்ளத்திற்கு அலையா அமைதி அளிக்கிறது. அறிவு எதைக் கூறுகிறதோ அதை இயற்கையும் கூறுகின்றது. நாம் இயற்கையின் எழிலிலே இன்பத்தையே காண் கிறோம்; அழகையே காண்கிறோம்; உண்மையையே தரிசிக்கிறோம். இயற்கை உலகிலும் ஒழுக்க உலகிலும் நாம் அழகின் ஒருமையையே கண்டு இன்புறுகிறோம்.' என்கிறார் வி ஆர். எம். செட்டியார். இவற்றையெல்லாம் நோக்குங்கால் இயற்கை என்பது மனிதனைச் சூழ்ந்துள்ள சூழல்; அது அவனது ஈடுபாட்டுக்கு இடமளிப்பது; அவனுக்கு ஆசிரியனாகவும் வழிபடுத்தும் நூலாகவும் அமைவது; புலன்களால் அறியக் கூடியதும் மனிதனோ அவன் படைப்போ அல்லாததும் என்று அறிகிறோம். பொதுவாகத் தொல்காப்பியம் கூறிய முதல், கருப்பொருள்களே இயற்கையுள் பெரிதும் அடங்கக் காணலாம். வானம், வானின் பயனாம் மழை, அம்மழையின் பயனாம் செழிப்பு, அருவி, ஆறு, கடல், நெருப்புக் கோளமாய் மேனின்று உலகை ஆட்சி செலுத்தும் கதிர்வேந்தன், இரவின் இருள் தகிப்பைத் தண்மைய மாக்கும் திங்கட்செல்வன், நாகரிகத்தின் நாட்டம் நாடும்