பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 39 சிற்றுார், அங்குத் தன் நிலையை உணர்த்தி அமைகின்ற மணல் வடியும் ஓடை, அவ்வோடையிலே நீந்திவரும் தென்றற் காற்று, தென்றல் பட்டுச் சிலிர்த்து நிற்கும் உயர்ந்த மலை, அம்மலையிலே தவழ்ந்து செல்லும் மஞ்சுப் புகை இவை போன்றன வெல்லாம் இயற்கையின் இயல்பழகை எடுத்துணர்த்தி நிற்பதனை நாம் கண்டு மகிழ்கிறோம்; கவிஞர்களும் மகிழ்ந்தனர். அம்மகிழ்ச்சியை, இன்பத்தை, உணர்வை மொழியாக்கித் தருகின்றனர். அம்மொழி கவிதை மொழி. கவிதை நம்மை மேலும் அதில் ஈடுபடச் செய்து மகிழ்விக்கிறது. - இலக்கியத்தில் இயற்கை மேலைநாட்டுக் கவிஞர்களின் இலக்கியப் படைப்புக் களை ஆயும்போது, ஒவ்வொருவருக்கும் இயற்கை பற்றிய ஒரு தனிக்கொள்கை இருப்பதை உணர முடிகிறது. வில்லியம் பிளேக், இயற்கையை இறைவனாகிய பரம் பொருளின் முகத்திரையாகக் கண்டான். வேர்ட்ஸ் வொர்த்தோ அழகுணர்ச்சி தந்து அறிவையும் புகட்டும் ஒரு தோழியாகக் காண்கிறான். உணர்வுக் கவிஞர்களாகிய ஷெல்லி, கீட்ஸ், பைரன் போன்றோர் உணர்வைத் துாண்டிப் புலன் இன்பந் தரும் காதல் நிலையில் இயற்கையைக் காண்கின்றனர். ஜப்பானியக் கவிதைகளில் *ஹைகூ’ போன்ற குறுகிய வடிவப் பாடல்களில் உணர்ச்சி பாவத்தை வெளியிடும் முகமாகவே இயற்கையைக் கையாளுகின்றனர். இப்போக்கில் தமிழ்க் கவிதையை ஆய்ந்தால், சங்க இலக்கியங்களில் மட்டுமே, இயற்கை பற்றிய இலக்கியக் கொள்கை' வரையறுக்கப்பட்டதாகவும், பிற நாட்டுக் கொள்கைளையும் விஞ்சுவதாகவும் அமைந்திருக்கக் காண லாம். முதல் கருப்பொருட்கள் இயற்கைப் பொருட்களே. அவை உணர்ச்சி வெளிப்பாட்டைக் கூர்மைப்படுத்தித் தெளிவாக்கும் பின்புலமாக ஆளப்படுகின்றன. சங்க