பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியத்தின் நடப்பியல் தன்மைக்கு (Realism) இதுவே காரணமாம்." இயற்கையியல் விருந்தியல் (Naturalism and Romanticism) ஆகிய இரண்டும் சங்க இலக்கியத்தின் பண்பு களாக உள்ளன. சங்கப் புலவர்களுக்கு அமைந்திருந்த நுட்பமான புலனுணர்வு அளவிறந்த சிறப்புடையது. மலரீட்டங்களின் மாய வண்ணங்களை அவர்களின் காட்சிப்புலன் ஊடுருவிச் செல்லும், அசைந்தாடும் பூங்கொடியின் அருமைப்பாடலிலே அவர்களின் செவிப் புலன் திளைக்கும்; விரிந்த மலர்களின் பட்டிதழ்களின் மெனமையைத் தொடாமல் தொட்டுணரும் அவர்கள் பொறியும் புலனும்; கனிகளின் மணத்திலே, மலர்களின் மணத்திலே, இன்னும் இயற்கை அன்னை வழங்கும் எண்ணற்ற இன்ப விருந்துகளிலே திளைக்கும் அவர்களின் புலமை நெஞ்சம். மனித இனத்தின் பேராற்றல்களாகிய காதல் வீரம் ஆகிய இரண்டையும் ஊடுருவிப் பாய்ந்து பரந்து கிடக்கச் செய்யும் அளவுக்கு இயற்கையினிடத்து: அவர்கள் எல்லையற்ற காதல் கொண்டிருந்தனர். இத்துணையளவு இயற்கைக்கு இலக்கியத்தில் இடம் அளித்தும், :இயற்கை என்ற சொல்லோ அதற்கு இனமான பிறிதொரு சொல்லோ ஓர் இடத்தும் குறிக்கப் படவேயில்லை. உலக வாழ்வில் மனிதவாழ்வு ஒரு கூறு என்றால், அவனுக்குப் புறத்தே உள்ளவற்றைப் பிறிதொரு கூறு என்பர். அப்புற வாழ்வின் குறியீடு என்ற அளவில்கூட இயற்கை என்ற சொல்லைச் சங்க இலக்கியம் குறிக்கவில்லை. o பண்டைத் தமிழ்ச் சான்றோர்கள் இயற்கையைத் தனியொரு பொருளாகக் கருதிப் பாடினாரல்லர். காதல், வீரம் என்பவற்றைத் தலைமைக் கூறுகளாகக் கொண்டு பிற பல கூறுகளையும் துணையாகப் பெற்றுள்ளது மனித வாழ்க்கை. அத்தகைய மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் வருணித்துத் தெளிவுபடுத்துவதற்காகவே