பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 41 பண்டைத் தமிழ்ச் சான்றோர் இயற்கையைப் பயன் படுத்தினர். சுருங்கச் சொன்னால், மனித இதயத்தின் உணர்வுகளையும், இயற்கையின் கவர்ச்சி நிறைந்த எழிலையும், நெருங்கிய பிணைப்புடையனவாய் இனிய உறவுடையனவாய் இணைத்தனர் எனலாம்.

இயற்கை அரங்கு, மனித அரங்கு ஆகிய இரண்டு களங்களே கவிஞனின் தொழிற்சாலைகள்' என்று ஜே. சி. ஷார்ப் என்பார் கூறுகிறார்."

மானிட உணர்வுகளோடு இயற்கையின் எழிலை இயைபுறச் செய்தது பண்டைத் தமிழிலக்கிய மரபாகும். ஜே. சி. ஷார்ப் பின்வருமாறு ஒர் இடத்தில் குறிப்பிடு கின்றார். மனிதனுடைய ஆன்மாவைத் தன்வயப்படுத்திக் கொள்ள நினைக்கின்றது இயற்கை. அது பலவகையான மாயங்களைச் செய்து மனித இதயத்தை ஈர்க்கப் பார்க்கிறது. விரிந்து கிடக்கும் பரப்பாலும் ஓங்கி வளரும் உயரத்தாலும் இயற்கையானது மனிதனை உயர்த்த முனைகின்றது. தன் எழிலால் அவனை மகிழ்விக்க முயல் கின்றது. துடைத்துத் தொலைக்கும் தன் அழிப்பாற்றலால் அவனை அவலத்தில் மூழ்கடிக்கப் பார்க்கிறது. கொலு விற்றிருக்கும் தன் அமைதித் திறத்தால் அவனுக்கு மீட்சி தருகின்றது. இவ்வாறான எண்ணற்ற செயல்களின் வாயிலாக இயற்கை மனித இதயத்தைக் கவர்வதற்கு இடையறாமல் முயன்று கொண்டேயிருக்கிறது; இயற் கைக்கும் மனித மனத்துக்கும் இடையேயுள்ள தொடர்பு - அதாவது, புறக்காட்சிக்கும் அக உணர்வுக்கும் இடையே நடைபெறும் பரிமாற்றம் - மிக நுட்பமானது; மாயம் நிறைந்தது. எனினும் புறமும் அகமும் கலக்கும் இக்காட்சி இடையறாது நடந்து வருகின்றது என்பது உண்மை. சங்க இலக்கிய மரபு இவ்வுண்மையை உணர்ந்து போற்றி வந்திருக்கின்றது." шт—3